செவ்வாய், 24 நவம்பர், 2015

ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு படை எடுக்கும் இலங்கையர்கள் - பாரிஸ் தாக்குதலின் பின்னர் இலங்கையர்களுக்கு புகலிடம் மறுப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் மேலும் இலங்கையர்கள் இணைந்து கொண்டுள்ளதாக அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள பிரச்சார சஞ்சிகையில் குறிப்பிப்பட்டுள்ளது.



கண்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் இயக்கத்தில் இணைந்து கொண்டு உயிரிழந்திருந்தார். இந்த நிலையில், குறித்த தீவிரவாதியின் பெற்றோர், மனைவி, ஆறு பிள்ளைகள் உள்ளிட்ட பதினாறு இலங்கை முஸ்லிம்கள் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையைச் சேர்ந்த குறித்த தீவிரவாதியின் நெருங்கிய உறவினர்களான, 16 முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ளதாகத் அந்த தகவலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிலானி என்ற இலங்கையர் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாரிஸ் தாக்குதலின் பின்னர் நான்கு நாடுகளில் இலங்கையர்களுக்கு புகலிடம் மறுக்கப்பட்டுள்ளது

ஐரோப்பாவின் பால்கன் பிராந்தியத்தைச் சேர்ந்த மெஸிடோனியா மற்றும் சேர்பியா உட்பட நான்கு நாடுகளில் இலங்கையர்களுக்கான புகலிடம் மறுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் பிரகாரம் மெஸிடோனியாவுக்கு இலங்கை, சூடான், ஸைபீரியா, கொங்கோ மற்றும் பாகிஸ்தானிலிருந்து புகலிடம் கோரி வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என சேர்பியாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் மெலிடா சுன்ஜித் தெரிவித்துள்ளதாக ஐ.நாவின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பிரசுரமாகியுள்ளது.

தங்கள் நாடுகளில் வந்து குவியும் புகலிடக் கோரிக்கையாளர்களால் அந்நாட்டு மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், அவர்களுடன் ஆயுதக் குழுவினரும் வந்து சேரக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அச்சமடைந்துள்ளதாகவும், பாரிஸ் தாக்குதலின் பின் அந்த அச்சம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் மெலிடா சுன்ஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

மெஸிடோனியா மற்றும் சேர்பியாவின் எல்லைகளுக்கு சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு மாத்திரம் ஓரளவுக்குப் புகலிடம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல