ஞாயிறு, 8 நவம்பர், 2015

தேங்காய் தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 1/2 கப்
தக்காளி - 3 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
பூண்டு - 3 பற்கள் (நறுக்கியது)
வர மிளகாய் - 2-4
கறிவேப்பிலை - சிறிது
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் இஞ்சி, பூண்டு, வர மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

பின்பு அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து, தீயை குறைவில் வைத்து வதக்கி, பின் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றினால், சுவையான தேங்காய்
தக்காளி சட்னி ரெடி!!!
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல