வெள்ளி, 22 ஜனவரி, 2016

பன்றிக்குட்டிகள் மீது குதித்து குதித்து விளையாடிய மனித மிருகம்: பலியான 72 பன்றிகள்!

ஸ்பெயின் நாட்டில் உள்ள பன்றிகள் வளர்ப்பு பண்ணை ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், அங்குள்ள பன்றிக்குட்டிகளின் மீது குதித்து குதித்து விளையாடி 72 பன்றிகளை கொன்றுள்ளார்.


ஸ்பெயின் நாட்டின் Almeria நகரில் அமைந்துள்ள Huercal-Overa என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் பன்றிகள் வளர்ப்பு பண்ணை ஒன்றில், ஏராளமான பன்றிக்குட்டிகள் நடைகூடத்திற்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.

அப்போது, அங்கு பணியாற்றும் Lithuanian(19) என்ற ஊழியர், அந்த பன்றிக்குட்டிகளின் மீது, ஏதோ நீச்சல் குளத்தில் குதிப்பது போன்று, மூன்று முறை குதித்து குதித்து எழுந்திருக்கிறார்.

இந்த காட்சியை Spaniard (22) என்ற இவரின் நண்பர், வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிசார், சம்பந்தப்பட்ட பண்ணைக்கு சென்று அங்கிருந்த மேலாளரிடம் விசாரணை நடத்தியதில், இந்த இரு நபர்களும் இணைந்து விளையாட்டுத்தனமாக செய்த இச்செயலால், 22 பன்றிக்குட்டிகள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டன, 53 பன்றிக்குட்டிகள் தீவிர காயமடைந்ததன் காரணமாக காப்பாற்ற முடியாததைத் தொடர்ந்து உயிரிழந்தன.

இதுகுறித்து அங்கிருந்த நபர் ஒருவர் கூறியதாவது, நாங்கள் பன்றிகள் அனைத்தையும் கூடாரத்திற்கு மாற்றியபின்னர், அதிக எடையுடைய இந்த நபர், இவ்வாறு குதித்து விளையாடியதன் காரணமாக இக்கோர சம்பவம் நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

தற்போது, விலங்குகள் துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் அந்நபர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல