வெள்ளி, 29 ஜனவரி, 2016

யாழ் டான் ரிவி ஜெயசந்திரன் ரீவியில் இருந்து கலைக்கப்பட்டார்!

யாழ் டான் தொலைக்காட்சி பிரதி பணிப்பாளர் என பலராலும் அறியபட்ட ஜெயசந்திரன் இன்று துரத்தப்பட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் யாழில் உள்ள தமிழ் இராணுவ துணைக்குழு ஒன்றிடம் பின்கதவால் 50 இலட்சம் பெற்ற டான் தொலைக்காட்சி பிரதி பணிபாளராக தன்னை இனங்காட்டும் இவர் தேர்தல் காலத்தில் ஜ.தே.கட்சியினரின் விளம்பரத்தை தொலைக்காட்சியில் இருட்டடிப்பு செய்தவர்.



யாழில் இருந்து ஒளிபரப்பாகும் டான் தொலைக்காட்சியின் சாதாரண பணியாளராக கடமையாற்றிவரும் நிலையில் தன்னை டான் தொலைக்காட்சியின் பிரதி பணிப்பாளர் எனவும் வெளியுலகத்திற்கு காட்டி வந்தவருமான அ. ஜெயச்சந்திரன் பல கோடி ரூபாய் பணத்தினை யாழ் குடாநாட்டில் டான் தொலைக்காட்சியின் பெயரை சொல்லி சுருட்டியதாக தெரியவந்த நிலையில் இன்றைய தினம் டான் தொலைக்காட்சி மத்திய குழுவினால் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஜெயச்சந்திரன் என்பவர் டான் தொலைக்காட்சியில் இருந்து கொண்டு தமிழ் தேசியத்திற்கு எதிராகவும் ஆளும் அரசுக்கு எதிராகவும் அரச அமைச்சர்களுக்கு எதிராகவும் வேறு சில நாசகார தமிழ் துணைக்குழுவின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்பட்டுவந்தவர்.

தன்னை டான் பிரதி பணிப்பாளர் என கூறி அரசியல்வாதிகள் வர்த்தகர்களிடம் பணமோசடியிலும் ஈடுபட்டு வந்துள்ளமை தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும் ஜெயச்சந்திரன் டான் என்ற பெயரை பயன்படுத்தி பல பெண்களுடனும் சில்மிசத்தில் ஈடுபட்டுள்ளமை தற்போது ஆதாரத்துடன் நிரூபணமாகியுள்ளது.

முன்னாள் மாநகர முதல்வர் மேஜர் யோகேஸ்வரியின் கைப்பிள்ளையாகிய இவர் யாழ் நகரில் வர்த்தக விளம்பர சேவையை டான் நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் என்ற நாமத்தை பாவித்து பின் கதவால் தன்வசப்படுத்தி தற்போது நடத்தி வருகிறார்.

ஆனால் டான் நிறுவனத்திற்கும் அவ் விளம்பர சேவைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று டான் தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனினும் இவரை டானில் இருந்து பலமுறை வெளியேற்ற நடவடிக்கை எடுத்த போதும் அது கை கூடவில்லை.

எனினும் இன்றைய தினம் மது போதையில் நிறுவனத்திற்குள் நுழைந்த ஜெயா டான் செய்தி பணிப்பாளருடன் தவறான வாய்பிரயோகத்தில் ஈடுபட்டு பணிப்பாளரை தாக்க முட்பட்ட வேளை கெட் அவுட் போடா வெளியே என நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

குடாநாட்டான்

New Jaffna
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல