தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் தமிழர் அரசியல் பரப்பில், நன்மை தீமைகளையும் தாண்டி, ஒரு பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இதற்கு சாதகமாகவும், பாதகமாகவும், பல்வேறு தரப்பினரும், விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
தமிழ் மக்கள் பேரவைக்கு அரசியல் நோக்கம் கிடையாது அதில் ஈடுபடப் போவதில்லை என்ற அதிலுள்ளவர்களின் வாதம் உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், இந்த அமைப்பு எதனைச் செய்யப் போகிறது –- எங்கிருந்து செய்யப் போகிறது- – யாரை வைத்துச் செயற்படப் போகிறது என்ற கேள்விகள் இருக்கின்றன.
இந்தப் பேரவை பல்வேறு துறைசார் கட்டமைப்புகளைக் கொண்டு செயற்படவுள்ளதாக கூறியிருக்கின்ற போதிலும், இதுவரை அது உருவாக்கியுள்ள கட்டமைப்பு, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுக்கான திட்டத்தை தயாரிக்கும் நிபுணர் குழு மட்டும் தான். இந்த உபகுழு அடுத்த மூன்று மாதங்களுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி, புதிய அரசியலமைப்பு ஒன்றை வரையும், முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ள நிலையில் தான், தமிழ் மக்கள் பேரவையும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.
அரசியலமைப்பு திருத்தத்தின் போது, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான யோசனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்வைக்கத் தயாராகி வருகின்ற நிலையிலேயே, தமிழ் மக்கள் பேரவையும் அதே முயற்சியில் இறங்கியிருக்கிறது.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை தனியே அரசியல்வாதிகளிடம் மட்டும் விட்டு விட முடியாது என்றும், தமிழர்களின் தலைவிதியை ஒரு சில தனிநபர்கள் மாத்திரம் தீர்மானித்துவிட முடியாது என்றும், தமிழ் மக்கள்
பேரவை கூறுகின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வையே முன்வைக்கப் போவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே கூறியிருந்தது. தேர்தல் அறிக்கையிலும் அதுபற்றிய வாக்குறுதியே கொடுக்கப்பட்டது.
அது போன்று தமிழ் மக்கள் பேரவை முன்வைக்கப் போகும் யோசனையும் அதனையொட்டிய ஒன்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உபகுழுவில் உள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் அதுபற்றிக் கூறியும் இருக்கிறார்.
ஆனாலும், இரண்டு தரப்பினராலும், வெவ்வேறு பாத்திரங்களில் தான் இந்த சமஷ்டித் தீர்வு முன்வைக்கப்பட விருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கப் போகும் யோசனைகள் குறித்து அனைவருடனும் கலந்துரையாடப்படும் என்ற உறுதிமொழியை இரா. சம்பந்தன் தன்னிடம் கொடுத்திருப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்வு யோசனைகள் இரண்டொருவருக்குள் தயாரிக்கப்படுவதாக சொல்லப்படும் குறைபாடுகள், தமிழ் மக்கள் பேரவைக்கும் பொருந்தும்.
ஏனென்றால், தமக்குள் தெரிவு செய்யப்பட்ட 15 பேர் தயாரிக்கவுள்ள அந்த யோசனையை, தம்மைத் தாமே தெரிவு செய்து கொண்ட தமிழ் மக்கள் பேரவையின் 30 உறுப்பினர்கள்தான் அங்கீகரிக்கப் போகின்றனர். அதற்குப் பின்னர், மக்களின் முன்பாக அந்த தீர்வு யோசனைகள் முன்வைக்கப்படும் என்று தமிழ் மக்கள் பேரவை அறிவித்திருக்கிறது.
ஆனால், அவர்கள் ஏற்றுக்கொண்ட அந்த யோசனைகளில் பொதுமக்கள் எவ்வாறு திருத்தம் செய்ய முடியும் என்றோ, அவ்வாறு முன்மொழியப்படும் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றோ எந்த உத்தரவாதமும் கொடுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனைச் செய்கிறதோ, அதனையே இந்தப் பேரவையும் செய்யப் போகிறது.
இங்கு தமிழ் மக்களின் கருத்துக்கள் எந்தளவுக்கு ஜனநாயக பூர்வமாக உள்வாங்கப்படும் என்ற சந்தேகங்கள் இருக்கின்றன.
இந்தநிலையில், தம்மை மக்களின் பிரதிநிதிகள் என்ற அதிகாரத்தில், அரசியலமைப்பை வரையும் தகுதி இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எண்ணிக் கொள்வதற்கும், தேர்தல் ஒன்றின் மூலம், தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப் பெறாத ஒரு அமைப்பு அவ்வாறு செயற்பட எத்தனிப்பதற்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன.
விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு போதும் தேர்தல்களில் மக்களின் ஆதரவைக் கோரியது கிடையாது. ஆனாலும், தமிழ் மக்களின் ஆதரவு அவர்களுக்கு இருக்கவில்லையா என்ற முணுமுணுப்புகள் காதில் கேட்கவே செய்கிறது.
அது உண்மை. புலிகளை மக்கள் ஆதரித்தார்கள். அதுபோலவே புலிகள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்பினார்களோ அவர்களுக்கும் மக்கள் வாக்களித்தார்கள்.
ஆனால், தமிழ் மக்கள் பேரவை விடுதலைப் புலிகளின் அளவுக்கு தூய்மையானது என்று எவராலும் கூறமுடியாது. ஏனென்றால் அதிலுள்ளவர்களின் கடந்தகாலம் பற்றி அறிந்தவர்கள் எவரும் அந்த உண்மையை ஏற்றுக் கொள்வர்.
அதுபோல, இந்த அமைப்பிலுள்ளவர்கள் இதற்கு முன்னர் தேர்தல்களில் யாருக்கு வாக்களிக்குமாறு கைகாட்டினரோ அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருக்கவுமில்லை.
எனவே, இந்த விடயத்தில், விடுதலைப் புலிகளை இழுத்து நியாயப்படுத்திக் கொள்ளக் கூடாது.
தமிழ் மக்களிடம் இருந்து அவர்களுக்காக தீர்வு ஒன்றை பெறுவதற்கு உறுதியான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டால் அது வரவேற்றப்பட வேண்டிய முயற்சி.
ஆனாலும், அது எந்தளவுக்கு சாத்தியமானது- பக்கசார்பற்றதாக இருக்கும், நிபுணர் குழு எனச் சொல்லப்படுவோர் அதில் தமது கருத்துக்களை திணிக்க முனையமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற
கேள்விகளெல்லாம் உள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றாலும் சரி, தமிழ் மக்கள் பேரவை என்றாலும் சரி, தமிழ் மக்கள் முன் தமது தீர்வுத்திட்டத்தை முன்வைப்பது முக்கியமான விடயமல்ல.
அந்த திட்டத்தில் தமிழ் மக்கள் தமக்குத் தேவையான திருத்தங்களை முன்வைத்தால், அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது.
அத்தகைய நோக்கம் அல்லது நெகிழ்வுத்தன்மை இல்லாவிட்டால், அடிமட்டத் தமிழ் மக்களின் தீர்வுத் திட்டமாக அதனை பிரேரிக்கக் கூடாது.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் அதனை கூட்டமைப்பின் தீர்வுத் திட்டமாகவோ, பேரவையின் தீர்வுத் திட்டமாகவோ தான் முன்மொழிய வேண்டும்.
அதேவேளையில், தனது யோசனையை தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்ற கோதாவில் கூட்டமைப்பு முன்வைக்கலாம். ஏனென்றால் அவர்களுக்கு அந்த ஆணை தேர்தலில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் தமிழ் மக்கள் பேரவை ஒரு சிவில் அமைப்பாகவே அதனை முன்வைக்க வேண்டியிருக்கும்.
சிவில் அமைப்புகளின் கருத்துகள், அரசியலமைப்பு திருத்தங்களின் போது கவனத்தில் கொள்ளப்படும் என்றாலும், அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
இத்தகைய கட்டத்தில், தமிழ் மக்கள் பேரவை முன்வைக்கப் போகும் தீர்வு யோசனைகள் கருத்தில் கொள்ளப்படுமா என்பது கேள்விக்குரியது.
இதே யோசனைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக முன்வைக்கப்பட்டால், அதற்கு கூடுதல் பெறுமானம் இருக்கும் என்பது உண்மை.
ஆனால், கூட்டமைப்புடன் இணைந்து, அத்தகையதொரு யோசனையை முன்வைக்கும் அளவுக்கு தமிழ் மக்கள் பேரவை எந்த முயற்சிகளையும் முன்னெடுத்திருக்கவில்லை. அத்தகைய நெகிழ்வுப்போக்கும் அதனிடம் இல்லை.
கூட்டமைப்புக்கு எதிரானதல்ல என்றும், அதற்கு ஆதரவான ஒரு அமைப்பே என்றும் நம்ப வைக்க முனையும் தமிழ் மக்கள் பேரவை, கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத்தக்க ஒரு நிகழ்ச்சி நிரலை கொண்டு செயற்பட்டிருக்கவில்லை.
அதன் ஆரம்பம் தொடக்கம் தற்போது வரையான நடவடிக்கைகள் அனைத்தும், கூட்டமைப்பை விமர்சிக்கும் வகையிலானதாக, அதற்கு கடுப்பேற்றும் வகையிலானதாகவே அமைந்திருக்கின்றன.
இப்படியான நிலையில், கூட்டமைப்பின் ஊடாக, தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளை எவ்வாறு முன்வைக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்கள் பேரவையும், இரண்டுபட்டு நின்று தமிழ் மக்களின் தீர்வுத் திட்டத்தை முன்வைக்கின்ற போது, சிங்களப் பேரினவாதிகள் இரண்டையுமே இலகுவாகத் தட்டிக்கழித்து விட முனைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு தீர்வையும் முன்வைக்காத நிலையில், அதன் தீர்வுத் திட்டத்தின் மீது கேள்வி எழுப்புவதோ, சோரம் போய்விட்டதாக குற்றம்சாட்டுவதோ அபத்தமானது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூலம் காத்திரமான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தியிருந்தால், அது கூடுதல் பயனுடையதாக இருந்திருக்கும்.
அவ்வாறானதொரு வாய்ப்பை, தமிழ் மக்கள் பேரவையிலுள்ளவர்கள் பயன்படுத்த முனையவில்லை என்பதை விட, பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்று தான் கூற வேண்டும்.
ஏனென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் சிந்தனையிலுள்ளவர்களே பேரவையில் அதிகம் உள்ளதால், அவர்கள் அத்தகைய நிகழ்ச்சி நிரலுக்கே முன்னுரிமை கொடுத்திருந்தனதே தவிர, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒன்றுபட்ட தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை.
இவ்வாறாக தமிழர் தரப்பு இரண்டுபட்ட போதெல்லாம், சிங்களப் பேரினவாதமே வெற்றியைப் பெற்றிருக்கிறது. இது தமிழரின் துன்பம் தோய்ந்த வரலாறு. இதனை மீண்டும் எவருக்கும் நினைவுபடுத்த வேண்டியதில்லை.
அதேவேளை, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், தமது பிரச்சினைக்கு நியாயமான நீதியான தீர்வு ஒன்றே அவசியம் என்பதே அவர்களின் ஒரே எதிர்பார்ப்பு.
தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்பும், அபிலாசைகளும், உள்ளக, வெளியக அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்குப்பட நேர்ந்திருப்பது அவர்களின் துரதிஷ்டம் என்றே கூற வேண்டும்.
-என்.கண்ணன்
வீரகேசரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக