ஞாயிறு, 3 ஜனவரி, 2016

திருமணத்தில் லக்ன பத்திரிகை வாசித்தல்

"திரு­மணம் ஆயிரம் காலத்துப் பயிர்", "திரு­ம­ணங்கள் சொர்க்­கத்தில் நிச்­ச­யிக்­கப்­ப­டு­கின்­றன.", இவை திரு­ம­ணத்தின் முக்­கி­யத்­து­வத்தை உணர்த்தும் பழ­ மொ­ழிகள் ஆகும்.


திரு­மணம் ஒரு­வ­ரு­டைய வாழ்வில் திருப்பு முனை­யாக கரு­தப்­ப­டு­கி­றது. பல்­வேறு நலங்­க­ளையும் வளங்­க­ளை யும் தரக்­கூ­டிய திரு­ம­ணத்தை பற்றி ஆண் மற்றும் பெண்­ணுக்கு பல்­வேறு எதிர்­பார்ப்­புகள் உள்­ளன.

முன்பின் தெரி­யாத ஒரு­வரை மணக்கும் போது அவர் நமக்குப் பொருத்­த­ மான­வ­ராக இருப்பாரா என்று எப்­படி அறி­வது? இதற்­குத்தான் ஜோதிடம் உத­வு­கி­றது.

ஆண், பெண் இரு­வ­ருக்கும் உள்ள மனப் பொருத்தம், உடல் பொருத்தம் இவற்றை அறிந்து இரு­வ­ரையும் வாழ் க்கை பய­ணத்தில் சேர்க்­க­லாமா? வேண்­டாமா? என முடி­வெ­டுக்க உத­வு­வதே ஜோதி­ட­மாகும்.

திரு­மணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்­பித்து விட்டால் முதலில் பார்ப்­பது ஜாத­கத்தை தான். அதிலும், 10 பொருத்­தத்தில் எத்­தனை பொருத்தம் இருக்­கி­றது என்று தான் முதலில் பார்ப்­பார்கள்.

ஜோதிடர், வரன்கள் இரு­வ­ரது ஜாதக த்தை கணித்து உத்­தமம் என்று சொன் னால்தான் மேற்­கொண்டு பேசு­வார்கள். இல்­லை­யென்றால், அடுத்த ஜாத­கத்­திற்கு தாவி விடு­வார்கள். திரு­மண விட­யத்தில் பத்து பொருத்­தங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­ப­டு­கி­றது. பத்து பொருத்­தங்­களை பார்க்கும் நாம் மனப் பொருத்­தத்­தையும் கண்­டிப்­பாக பார்க்க வேண்டும்.

அதா­வது, திரு­மணம் செய்­யப்­போகும் பெண்­ணுக்கு ஆணை பிடித்­தி­ருக்­கி­றதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்­தி­ருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்­வது அவ­சியம். அதன் பின்னர் தான் திரு­ம­ணத்தை நிச்­சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்­தி­ரமே வலி­யு­றுத்­து­கி­றது.

திரு­ம­ணத்தில் இலக்ன(ம்)ப் பத்­தி­ரிகை வாசித்தல், படித்தல், நிச்­ச­ய­தார்த் தம்,- நிச்­ச­ய­தாம்­பூலம் (பெண் பார்க்கும் படலம்) எனச் சொல்­வார்கள்.

மண­மகன் (மாப்­பிள்ளை) வீட்டார்- மண­ மகள் (மணப்பெண்) வீட்டார் ஆகிய இரு குடும்­பங்­களின் உற­வி­னர் கள் கலந்து சிறப்­பிக்கும் மங்­க­ள­க­ர­மான சந்­தோ­ஷ­மான இனிய நிகழ்வு இவ்­வை­பவம்.

இலக்னப் பத்­தி­ரிகை வாசித்தல்,படித்தல்

மண­ம­கனின் பெற்றோர் (தாய், தந்தை) இரு­வரின் பெயர்கள் மண­ம­கனின் (மாப்­பிள்ளை) பெயர் இடம்­பெற வேண்டும். அதே­போன்று (மணப் பெண்) மண­ம­களின் பெற்றோர் (தாய், தந்தை) இரு­வரின் பெயர்கள், மணப்­பெண்ணின் பெயர் என்­பன இந்த பத்­தி­ரி­கையில் இடம்­பெற வேண்டும்.

இந்­நி­கழ்ச்சி மண­ம­கனின் தாய்­மாமன்- (மாமி) அத்தை, ஆகிய இரு­வரின் மணப்­பெண்ணின் தாய் மாமன் (மாமி) அத்தை ஆகிய இரு வீட்­டாரின் ஆசிர்­வா­தத்­துடன் நடத்தும் மங்­க­ள­க­ர­மான நிகழ்வாகும்

நிச்­ச­ய­தார்த்தம் -– நிச்­ச­ய­தாம்­பூலம் பரிசம் போடுதல்

மண­ம­கனின் (மாப்­பிள்ளை) பெற்­றோர்கள் நாங்கள் எங்­க­ளது மகனை உங்கள் வீட்டு (மணப்) பெண்­ணோடு இணைப்போம் என்றும் அதே­போன்று (மணப்) பெண்ணைப் பெற்­றோரும் எங்கள் மகளை உங்கள் மக­னுக்கு (மாப்­
பிள்­ளைக்கு) இணைப்போம்" என உறு­தி­கூறி "இலக்­னப்­பத்­தி­ரிகை” எழுதிக் ­கொ­டுத்து கையெ­ழுத்­துப்­பெற்று வாக் குமாற மாட்டோம் என்று வாக்கு
தேவி (அன்னை சரஸ்­வதி தேவியை) நினைத்து பூஜை செய்து மணப்­பெண் ணின் வீட்டார் தாம்­(பூ­லத்­தட்டை) மண­ம­கனின் பெற்­றோ­ரி­டமும் மண­ம­கனின் (மாப்­பிள்ளை)பெற்றோர் மணப்­பெண்ணின் பெற்­றோ­ரி­டமும் தங்­க­ளது (தாம்­பூ­லத்­தட்டை) கைய­ளித்து இரு வீட்­டாரும் உறு­திப்­ப­டுத்தும் நிகழ்வே ! இது­வாகும்.

தாலிக்கு பொன்­னு­ருக்­குதல் வைபவம்

ஒரு சுப முகூர்த்த வேளையில் மணம கனின் வீட்டில் நடத்தும் (தாலிக்கு பொன்னுருக்குதல்) வைபவம் இந்நி கழ்வை பொற்கொல்லர் gold smith மங்க ளகரமான நாளில் நடத்தி வைப்பார். இவ்விரு நிகழ்வுகளும் திருமணத்திற்கு முன் இடம்பெறுபவை.

விஸ்வ மகாதேவா, பிரம்மஸ்ரீ இராமகிருஷ்ணன் ஆச்சாரி, கொழும்பு
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல