செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

கணவரின் 2 வது மனைவியை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற முதல் மனைவி குடும்பம்

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் பி.சி. தண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவருக்கு சொரூபா என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் ரவிக்கு அதே ஊரைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவரை கடந்த ஆண்டு 2-வது திருமணம் செய்து கொண்டார்.


2-வது மனைவியை காக்கிப்பேட்டை என்ற ஊரில் தனிக்குடித்தனம் வைத்தார். 2 மனைவி வீட்டுக்கும் ரவி சென்று வந்தார். தற்போது அனிதா கர்ப்பிணியாக உள்ளார்.

2 ஊர்களுக்கும் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டதால் 2-வது மனைவி அனிதாவை முதல் மனைவி இருக்கும் ஊரிலேயே குடித்தனம் வைத்தார். இதனால் ரவியுடன் முதல் மனைவி சொரூபா தகராறு செய்தார். பஞ்சாயத்து கூட்டி முறையிட்டார்.

பஞ்சாயத்தில் முதல் மனைவி சொரூபாவை விவாகரத்து செய்வதாக ரவி கூறினார். மேலும் நஷ்ட ஈடாக முதல் மனைவிக்கு ரூ.7.5 லட்சம் கொடுப்பதாகவும் ஒப்புக் கொண்டார். பஞ்சாயத்து இதனை ஏற்றுக் கொண்டது.இந்த நிலையில் பணத்துடன் வந்த ரவி பணத்தை மனைவியிடம் கொடுக்க மாட்டேன் என்றும் தனது மகன், மகள் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்வதாகவும், அதற்கு பாதுகாவலராக வேண்டுமானால் முதல் மனைவியை நியமிப்பதாகவும் பிடிவாதமாக கூறினார்.

இது மனைவி சொரூபா வின் உறவினர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ரவியை அவர்கள் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் நேராக ரவியின் காதல் மனைவி அனிதா வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த அனிதாவை அடித்து உதைத்தனர். அடுப்பில் இருந்த கொள்ளிக் கட்டையை எடுத்து உடலில் சூடு போட்டனர்.அதோடு அவரை நிர்வாணப்படுத்தி கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். கிராம மக்கள் இதனை வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் அனிதாவை காப்பாற்ற முன்வரவில்லை.

இதற்கிடையே தப்பி ஓடிய ரவி போலீசில் புகார் செய்து போலீசாருடன் அங்கு வந்தார். போலீசார் அனிதாவை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சொரூபா குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

dailythanthi
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல