சனி, 6 பிப்ரவரி, 2016

தொலைக்காட்சி லைவ் நிகழ்ச்சியில் பெண் நிருபரிடம் பாலியல் சீண்டல்.. வாலிபர்களுக்கு வலைவீச்சு (Video)

லைவ் நிகழ்ச்சியொன்றில் பெண் நிருபரிடம் அத்துமீறி நடந்துகொண்ட வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் ஜெர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஜெர்மன் நாட்டின் கலோங் (Cologne) நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஆயிரக்ணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். கலோங் நகரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் திருவிழா தொடர்பான நேரடி தகவல்களை தொலைக்காட்சி பெண் நிருபர் லாபை என்பவர் நேற்று தெரிவித்து கொண்டிருந்தார்.

அப்போது, புத்தாண்டு தினத்தில் போது அகதிகளால் எவ்வாறு பாலியல் வன்முறைகள் அரங்கேறியது என்பது தொடர்பாக அவர் மைக்கை பிடித்து காமிரா முன்பாக நின்று கூறிக்கொண்டிருந்தபோது பின் பக்கமாக வந்த ஒருவர் அவரிடம் அத்துமீறியுள்ளார். இது நேரடியாக ஒளிபரப்பானது.

இதைப்பார்த்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வருவதற்குள் சில்மிஷ நபர் தப்பியோடிவிட்டார்.

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல