புதன், 6 ஏப்ரல், 2016

மன்னாரில் அதிசய சிறுவன்!

மன்னாரில் சிறுவன் ஒருவனுக்கு இதயம் வலது பக்கத்தில் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக எல்லோருக்கும் இதயம் இடது பக்கமே இருக்கும். ஆனால் மன்னார் எமில் நகரைச் சேர்ந்த மூன்றரை வயது நிரம்பிய அன்றியோனோ என்ற சிறுவனுக்கு இதயம் வலது பக்கத்தில் உள்ளது.ஆயினும் அன்றியோனோ ஏனைய சிறுவர்களைப் போலவே சாதாரணமாக அனைத்து விடயங்களையும் செய்கிறார் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.



மன்னாரில் எமில் நகரில் ஜிம்ரோன் என்ற கிராமத்தில் அன்ரனி பெனான்றோ நிதர்சினி தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாக பிறந்த குறித்த சிறுவனை, அண்மையில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு பெற்றோர் கூட்டிச் சென்ற போது சளி அதிகமாக இருக்கின்றதென கூறிய வைத்தியர்கள் எக்ஸ்ரே பரிசோதனை செய்த போதே இதயம் வலது பக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

அன்றியோனோவுக்கு இதயம் மட்டுமல்ல ஏனைய சில உறுப்புக்களும் பக்கம் மாறி உள்ளமை தெரியவந்துள்ளது.குறித்த சிறுவனுக்கு ஈரலும் இடது பக்கமாக உள்ளது. வலது பக்கமாக இருக்க வேண்டிய பித்தப்பை அன்றியோனோக்கு இடது பக்கமாக உள்ளது. நுரையீரல் கூட இடம் மாறியிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்

அன்றியோனோ பரிசோதித்த வைத்தியர்கள் இது ஆச்சரியமான விடயம் என்கின்றனர்.எனினும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், வளர்ந்து வரும் மருத்துவ உலகில் இதனை எதிர்கொள்ள முடியுமெனவும் மன்னார் மாவட்ட வைத்தியசாலையிப் பணியாற்றும் வைத்திய கலாநிதி யு.என். அன்சலா மற்றும் மார்பு நோய் கிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி சமிந்த ஆகியோர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல