வியாழன், 21 ஏப்ரல், 2016

வேர்ட் டிப்ஸ்: குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த டெக்ஸ்ட் தேட - டாகுமெண்ட்டில் சப்ஸ்கிரிப்ட் / சூப்பர் ஸ்கிரிப்ட்

வேர்ட் புரோகிராமில் சொல் தேடுவதில் மிகவும் சக்தி வாய்ந்த வழிகளும் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சொல் மட்டுமின்றி, குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த சொற்களை மட்டும் தேடி அறியலாம். அதற்குக் கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளவும்.



1. நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், Ctrl+F கீகளை அழுத்தவும். வேர்ட் 2010 பயன்படுத்துபவராக இருந்தால், ரிப்பனில் ஹோம் டேப் காட்டப்பட வேண்டும். இங்கு Editing groupல் Find tool அடுத்துள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியினை கிளிக் செய்திடவும். பின் Advanced Find என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் Find and Replace என்ற டயலாக் பாக்ஸினைக் காட்டும். அதில் Find என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

2. More என்ற பட்டன் இருந்தால், அதில் கிளிக் செய்திடவும். வேர்ட் Find and Replace என்ற டயலாக் பாக்ஸின் விரிவான தோற்றத்தினைக் காட்டும். Find What கட்டத்தில் உள்ள எதனையும் நீக்கிவிடவும். No Formatting பட்டன் இருந்தால் அதில் கிளிக் செய்திடவும்.

3. அடுத்து Format பட்டனில் கிளிக் செய்து, பின்னர், Font என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Find Font என்ற டயலாக் பாக்ஸினைக் காட்டும். இப்போது, Effects என்ற பிரிவில் Superscript, Subscript போன்றவை ஷேட் செய்யப்பட்டு மறைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். அதாவது, இந்த பண்புகள் எல்லாம், தேடலில் ஒரு அம்சமாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பொருள்.

4. அடுத்து நீங்கள் தேடும் டெக்ஸ்ட்டில் இருக்க வேண்டிய பண்புகள் (character attributes) எவை என்று தேர்ந்தெடுக்கவும். இந்த பண்புகளின் பெயர்கள் அடுத்து இருக்க வேண்டிய கட் ட த்தில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்க மறக்க வேண்டாம்.

5. தொடர்ந்து ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து Find Next என்பதில் கிளிக் செய்திடவும்.

டாகுமெண்ட்டில் சப்ஸ்கிரிப்ட் / சூப்பர் ஸ்கிரிப்ட்

வேர்டில் சில வேளைகளில் பார்முலாக்கள் மற்றும் குறியீடுகள் அமைக்கையில் சப்ஸ்கிரிப்ட் மற்றும் சூப்பர் ஸ்கிரிப்ட், (Subscript, Superscript) அதாவது சொல்லுக்கு மேலாகவும் கீழாகவும் சிறிய அளவில் எண் அல்லது எழுத்து அமைக்க வேண்டியுள்ளது.

இதற்கு Font மெனு சென்று அங்கிருக்கும் கட்டங்களை டிக் செய்து அமைக்க வேண்டும். பின் அதனை நீக்க வேண்டும். இதற்குப் பதிலாக சுருக்கு வழி ஒன்று உள்ளது.

சொல்லுக்கு அருகே அமைத்திட வேண்டிய எண் அல்லது எழுத்தை அமைத்திடுங்கள். பின் அதனைத் தேர்ந்தெடுத்து Ctrl + Shift + =ஆகியவற்றை ஒரு சேர அழுத்தினால் சூப்பர் ஸ்கிரிப்டும் Ctrl + = அழுத்தினால் சப் ஸ்கிரிப்டும் கிடைக்கும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல