வெள்ளி, 6 மே, 2016

ஐ.எஸ். தீவிரவாத குழுவால் புதிய தாக்குதல், அச்சுறுத்தல் காணொளிக் காட்சி வெளியீடு (காணொளி, படங்கள் இணைப்பு)

image source: dailymail


பிரான்ஸ் மொழியில் பாடல் பாடிய சிறுவர் படை­யணி உறுப்­பி­னர்கள்

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தமது தீவி­ர­வாத குழுவின் சிறுவர் படை­ய­ணியைச் சேர்ந்த உறுப்­பி­னர்கள் பிரான்ஸ் மொழியில் பாடல் பாடு­வதை உள்­ள­டக்­கிய எதிர்­கால தீவி­ர­வாத தாக்­குதல் தொடர்­பான புதிய காணொளிக் காட்­சி­யொன்றை வெளி­யிட்­டுள்­ளனர்.


மேற்­படி காணொளிக் காட்சி சிறு­வர்கள் ஐ.எஸ். தீவி­ர­வாத தாக்­கு­தல்­தா­ரி­க­ளாக மாறு­வ­தற்கு ஆயுதப் பயிற்­சியைப் பெறு­வதை வெளிப்­ப­டுத்­து­கி­றது.

“எமது போராட்­ட ­வீ­ரர்கள் எங்கும் உள்­ளனர். அவர்கள் உயிர்த் தியாகம் செய்­வ­தற்கு தயா­ராக உள்­ளனர்" என அந்தப் பிரான்ஸ் மொழி­யி­லான பாடல் வரி­யொன்று கூறு­கி­றது. மேற்­படி காணொளிக் காட்­சியில் தோன்றும் சிறு­வர்­களில் பலர் மேற்­கு­லக நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் போன்று தோன்­று­கின்­றனர்.

அவர்கள் அனை­வரும் 12 வய­துக்கு கீழ்ப்­பட்ட வய­தை­யு­டை­ய­வர்கள் என நம்­பப்­ப­டு­கி­றது.

அதே­ச­மயம் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் அல் ஹாயத் சமூக ஊட­கத்தில் வெளி­யி­டப்­பட்ட இந்தக் காணொளிக் காட்­சியில் பிரான்ஸ் மொழிப் பாடலின் ஆங்­கில மொழி­பெ­யர்ப்பு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்டிருந்தமை குறிப்­பி­டத்­தக்­கது.

“உங்­க­ளது பெறு­ம­தி­ மிக்­க­வை­யாக கூறப்­படும் சுதந்­தி­ரங்கள் என்ற பெயரால் எம்மை படு­கொலை செய்­வ­தற்­கான உரி­மையை உங்­க­ளுக்கு நீங்­களே வழங்­கி­யுள்­ளீர்கள். உங்­க­ளது இந்த வெறுக்­கத்­தக்க குற்­றச்­செ­ய­லுக்­காக உங்கள் குருதி ஆறாக பாயப் போகி­றது" என அந்தக் காணொளிக் காட்­சியில் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

பிரான்ஸ் மொழி பேசும் சிறு­வர்­களைப் பயன்­ப­டு­த்தி ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் காணொளிக் காட்­சி­யொன்றை வெளி­யி­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும்.

இதற்கு முன் மேற்கு ஆபி­ரிக்­காவின் ஐ.எஸ். தீவிரவாதிகள் என அழைக்கப்படும் போகோ ஹராம் தீவிரவாதிகள் சிறுவர்கள் பாடல் பாடுவதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சியொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல