செவ்வாய், 24 மே, 2016

விபத்து குறித்து சமூக வலைத்தளத்தில் தரவேற்றம் செய்யும்வரை வீதியிலிருந்து எழ மறுத்த யுவதி

சீனாவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் வீதி விபத்­தொன்றில் சிக்­கி­யபின், இது குறித்த தக­வலை சமூக வலைத்­த­ளத்தில் வெளி­யி­டும்­வரை வீதி­யி­லி­ருந்து எழுந்­தி­ருக்க மறுத்­ததால் பெரும் போக்­கு­வ­ரத்து நெரிசல் ஏற்­பட்ட சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.



சீனாவின் ஜியாங்­கியோவ் நகரில் இந்த யுவதி செலுத்திச் சென்ற ஸ்கூட்டர், கார் ஒன்­றுடன் மோதி­யது. வீதியின் மத்­தியில் ஸ்கூட்­ட­ருடன் சேர்ந்து அப்­ பெண்ணும் சரிந்து வீழ்ந்தார்.

அதன்பின் அவர் உட­ன­டி­யாக எழ முற்­ப­ட­வில்லை. வீதியில் வீழ்ந்து கிடந்­த­வாறே தன்னைப் படம்­பி­டித்து சமூக வலைத்­த­ளத்தில் தர­வேற்றம் செய்யும் நட­வ­டிக்­கையில் அவர் ஈடு­பட்டார். இதனால், அவ் ­வீ­தியில் போக்­கு­வ­ரத்து நெரிசல் ஏற்பட்டது.


பின்னர் பொலிஸார் வந்து அப் ­பெண்­ணுடன் பேசி அவரை அங்­கி­ருந்து நகர வைத்­தனர். அப் பெண் வலி­யினால் அழ­வில்லை எனவும் அவர் தனது செல்­லிடத் தொலை­பே­சியை துலா­வு­வதில் கவ­ன­மாக இருந்தார் எனவும் அங்­கி­ருந்­த­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இப் பெண், விபத்தின் பின்னர் என்ன செய்­வது என்­பது குறித்து தனது சமூக வலைத்­தள நண்­பர்­க­ளிடம் ஆலோ­சனை கேட்­டி­ருக்­கலாம் எனவும் இதன்­போது அதி­கா­ரிகள் வரும்­வரை “குற்றம் நடை­பெற்ற இடத்­தி­லி­ருந்து” நகர வேண்டாம் என சிலர் அந்த யுவ­திக்கு ஆலோ­சனை வழங்­கி­யி­ருக்­கலாம் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எவ்­வா­றெ­னினும், அப்­ ப­கு­தியில் வாகன நெரிசல் ஏற்படுவது குறித்த கவலை யின்றி அவர் வீதியில் கிடந்தமை குறித்து பலரும் விமர்சித்துள்ளனர்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல