புதன், 1 ஜூன், 2016

விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழியில் திடீரென துலங்கும் மர்மம் அச்சத்தில் பிரதேச மக்கள்...

வட்டக்கச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள விடுதலைபுலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி அமைந்துள்ள இடத்தில் வழமைக்கு மாறான செயற்பாடுகள் நடை பெற்று வருகின்றன என பிரதேச பொது மக்களால் தகவல் தொிவிக்கப்பட்டுள்ளது.



நேற்று ( 31) இரவு இனந்தெரியாத நபர்களால் குறித்த பதுங்கு குழி அமைந்துள்ள காணியில் இரண்டு சிறிய குழிகள் தோண்டப்பட்டு தேடுதல் நடவடிக்கை ஒன்று நடத்தப்பட்டுள்ளது குறித்த காணியில் இன்று காலை தொடக்கம் 571 படைப்பிரிவு இராணுவத்தினர் சிலர் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் பிரதேச மக்கள் தொிவித்துள்ளனா்

யுத்தம் முடிவடைந்த பின்னர் பதுங்கு குழி அமைந்துள்ள காணி இராணுவத்தினரின் சிறிய காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு காவலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் எனினும் குறித்த காவலரண் ஒருவருடத்திற்கு முன்னர் அகற்றப்பட்டுள்ளது

இந்த நிலையில் குறித்த பகுதிக்குள் என்றுமே வந்திராத பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் பொலீசார் அடங்கிய குழுவினர் கடந்த 29.05.2016 அன்று பகல் வேளை மூன்று வாகனங்களில் வந்து இரண்டு மணிநேர தேடுதல் நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்ததாகவும் அதன் பின்பு நேற்றயதினம் இனந்தெரியாதவர்களால் இரவு வேளையில் குழிகள் தோண்டப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளமை மீண்டும் ஒரு அச்ச உணர்வை தோற்றுவித்திருப்பதாக அக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்

இருப்பினும் குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலீஸாரிடமிருந்து முழுமையான தகவல் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

globaltamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல