புதன், 1 ஜூன், 2016

இணையத்தைக் கலக்கிய மாயத் தோற்றத்திற்கான விடை....

கால்கள் எங்கே? பாதங்கள் எங்கே? இணையத்தைக் கலக்கும் ‘மாயத் தோற்றம்’

மாயத்­தோற்­றங்­களை ஏற்­படுத்தும் சில புகைப்­ப­டங்கள் அவ்­வப்­போது இணை­யத்தில் பரவி வரு­வ­துண்டு. தற்­போது ஒரு இளம் ஜோடி பரஸ்­பரம் அர­வ­ணைத்­துக்­கொண்ட நிலையில் பிடிக்­கப்­பட்ட புகைப்­ப­ட­மொன்று இவ்­வாறு பர­வி­யுள்­ளது.



மேலோட்­ட­மாகப் பார்ப்­ப­தற்கு இது சாதா­ரண ஒரு படம். இப்­ப­டத்தில், கடற்­க­ரை­யொன்றில் கெம­ரா­வுக்கு முதுகைக் காட்­டிக்­கொண்டு இருக்கும் ஓர் இளை­ஞரை யுவதி ஒருவர் இடுப்­புடன் சேர்த்து அர­வ­ணைத்­த­வாறு காணப்­ப­டு­கிறார்.

ஆனால், இப்­ப­டத்தின் கீழ்­ப்ப­கு­தியை நன்கு அவ­தா­னித்தால் நாம் காண்­பது என்ன என்­பது தொடர்பில் மூளையில் ஒரு குழப்பம் ஏற்­படும்.

இந்த இளைஞன், யுவதி ஆகிய இரு­வரின் கால்கள், பாதங்கள் காணப்­படும் நிலையே இந்த குழப்­பத்­துக்கு காரணம்.

புரி­யாத புதி­ராகக் கரு­தப்­பட்ட இப்­படம் “பிளட் ரீப்பர்” என்­ப­வரால் இணை­யத்தில் வெளி­யி­டப்­பட்­ட­வுடன் சமூக வலைத்­த­ளங்கள் மூலம் பல மில்­லியன் தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்­டுள்­ளது.

இப்­படி படம்­பி­டிக்­கப்­பட்­டி­ருக்க வாய்ப்­பில்லை எனவும் இது கிறபிக்ஸ் வேலை­யாக இருக்­கலாம் எனவும் சிலர் கரு­தலாம். இது கிறபிக்ஸ் அல்ல. உண்­மை­யான புகைப்­ப­டமே எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த இளைஞர், யுவதி இருவரின் கால்கள் எங்கே உள்ளன என உங்களால் கண்டறிய முடிகிறதா?



இந்த புதிரான புகைப்படம், சமூக வலைத்தளங்களில் இலட்சக்கணக்கானோரை தலைமயிரைப் பிய்த்துக்கொள்ள வைக்காத குறையாக யோசிக்க வைத்து விவாதங்களை ஏற்படுத்திய நிலையில் அப்புதிருக்கு விடையளிக்கும் விதமாக சமூகவலைத்தளவாசி ஒருவர் கருத்தொன்றைப் பகிர்ந்துள்ளார்.

ரெடிட் சமூக வலைத்தளத்தில் Musicmonk84…. என்பவர் வெளியிட்ட இக்கருத்தின்படி, மேற்படி இளைஞன் அணிந்திருக்கும் காற்சட்டை இரு நிறங்களைக் கொண்டது.

அது வெள்ளை மற்றும் கறுப்பு அல்லது பச்சை நிறமானது. இக்காற்சட்டையின் வெள்ளை நிறப்பகுதியானது யுவதியின் கால்களுடன் கச்சிதமாகப் பொருந்துவதால், அது யுவதியின் ஆடை என எண்ண வைக்கிறது இதுவே குழப்பத்துக்குக் காரணம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை இங்குள்ள புகைப்படத்தில் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல