வெள்ளி, 10 ஜூன், 2016

நண்பியுடன் இரகசிய காதல் ; கணவனின் ஆணுறுப்பை வெட்டிய மனைவி

தனது உயிர் நண்பியுடன் இரகசிய காதல் தொடர்பைப் பேணிய தனது கணவர் தனக்குத் துரோகம் செய்திருப்பதை கண்டறிந்து சினமடைந்த மனைவி, அவரது ஆணுறுப்பை மரத்தை வெட்டப் பயன்படுத்தப்படும் உபகரணத்தால் வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.



சுற்றுலா ஸ்தலமான பட்டயாவில் பொரித்த கோழி இறைச்சியை விற்பதை தொழிலாகக் கொண்ட குறித்த மனைவி, தனக்குத் துரோகம் செய்த தனது கணவரை பழிதீர்க்க சம்பவ தினம் அவருடன் காதல் சரசத்தில் ஈடுபடுவதாக பாசாங்கு செய்து அவரது காற்சட்டையை கழற்ற ஊக்குவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் சிறிதும் எதிர்பாராத வகையில் தயாராக வைத்திருந்த மரம் வெட்டும் உபகரணத்தால் அவரது ஆணுறுப்பைத் துண்டித்துள்ளார்.

இதனால் வலி தாங்காது துடித்த சொம்சாய் என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் குறித்த கணவர், வலியைத் தணிவிக்க வெட்டப்பட்டு குருதி பெருக்கெடுத்தோடிய ஆணுறுப்பு பகுதியில் பனிக்கட்டியை கொண்ட பையை அழுத்திப் பிடித்தவாறு வீதியில் இறங்கி உதவி கோரி கூச்சலிட்டுள்ளார்.

இந்நிலையில் கணவர் வேதனையால் துடிப்பதைப் பொறுக்க முடியாது மனம் இளகிய மனைவி, அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்ந்து அவர் அம்புலன்ஸ் வண்டியில் தனது கணவர் சகிதம் பட்டயா நகரிலுள்ள பாங் லமுங் மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சொம்சாயிக்கு அவரது பெருமளவில் வெட்டப்பட்டு முழுமையாக துண்டிக்கப்படும் நிலையில் காணப்பட்ட ஆணுறுப்பை மீளப் பொருத்த அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சொம்சாயிடம் விசாரணைகளை மேற்கொள்ள அவர் குணமாகும் வரை பொலிஸார் காத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல