வியாழன், 9 ஜூன், 2016

பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லையா

திடீரென உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லையா. என்ன செய்தாலும், மீண்டும் லாக் இன் காட்சி திரை காட்டப்படுகிறதா. உங்கள் கணக்கு பெயர் மற்றும் பாஸ்வேர்டினைச் சரியாகத்தான் இன்புட் செய்து இருப்பீர்கள். இருப்பினும் கணக்கைத் திறக்க இயலவில்லை. இதற்கான காரணமும், தீர்வும்



பேஸ்புக்கில் பயனாளர்களைச் சிக்க வைத்து, அவர்கள் கணக்கில் நுழையாத வகையில் மாற்றத்தினை ஏற்படுத்தும் ஸ்பேம் ஒன்று சுழற்சியில் உள்ளது. இதன் காரணமாக உங்களுக்கு இப்படியான நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம்.

இது போல ஏற்படுகையில் என்ன செய்திட வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

முதலில் www.facebook.com தளத்திற்குச் செல்லவும்.

நீங்கள் நுழைய முடியவில்லை என்றால், லாக் இன் திரை தொடர்ந்து காட்டப்படும்.

மேல் வலது பக்கத்தில், லாக் இன் செய்வதற்கான கட்டங்கள் இருக்கும்.

இந்த உள்ளீடு கட்டங்கள் கீழாக, வெளிர் நீல வண்ணத்தில், “Forgot account” என இருக்கும்.

இதில் கிளிக் செய்திடவும். உடன், நீங்கள் ஒரு புதிய திரைக் காட்சிக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
இங்கு உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டுடன் தொடர்புள்ள மின் அஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்திட கட்டங்கள் இருக்கும்.

இந்த தகவல்களை உள்ளீடு செய்து, Search என்பதில் கிளிக் செய்திடவும்.

இங்கு உங்கள் பாஸ்வேர்டை மீண்டும் அமைத்திட வாய்ப்பு தரப்படும்.

இந்த வாய்ப்பு நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த மின் அஞ்சல் வழியாகச் சரி வழங்கப்படும்.

உங்கள் அஞ்சல் முகவரிக்கு ஒரு குறியீட்டு எண் அனுப்பப்படும். அல்லது தொலைபேசியினை அமைத்திருந்தால், குறிப்பிட்ட தொலைபேசிக்கு எஸ்.எம்.எஸ். வழியாக அந்த எண் கிடைக்கும்.
இதனைப் பயன்படுத்தி, நீங்கள் உங்கள் யூசர் நேமிற்கு உரிய பாஸ்வேர்டினை மாற்றி அமைத்துக் கொண்டு தொடர்ந்து பயன்படுத்தலாம்.

இது போன்ற சிக்கலான நிகழ்வுகளிலிருந்து மீள, பேஸ்புக் அக்கவுண்ட்டிற்கான மின் அஞ்சல் முகவரி மற்றும் மொபைல் போன் எண்ணை அவ்வப்போது சரியாக உள்ளதா என அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல