திங்கள், 4 ஜூலை, 2016

அடுத்த கொலை.....

பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி கொலை

மேட்டூர் அருகே, 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்து, உடலை பாத்திரத்தில் மூடி வைத்த காட்டுமிராண்டி கைது செய்யப்பட்டான்.


சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே, காவேரிபுரம் தெலுங்கனுாரை சேர்ந்தவர் ராஜா; மீனவர். இவரது மனைவி வள்ளி. இவர்களது இரண்டாவது மகள் தர்ஷிணி, 7, அரசு பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்தாள்.

மனநோய் பாதிப்பு:அதே கிராமத்தை சேர்ந்தவர் ரூபா. கணவரை பிரிந்த ரூபா, பெற்றோர் வீட்டில் வசித்தபடி, ஊர் ஊராக சென்று காய்கறி வியாபாரம் செய்கிறார். ரூபாவின் மகன் திருமூர்த்தி, 18, மனநோயால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒன்பதாம் வகுப்பு வரை படித்த இவன், பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தான்.

சில மாதங்களுக்கு முன், பள்ளி மாணவர் ஒருவரை, அருகிலுள்ள மலைப்பகுதிக்கு கூட்டி சென்று, திருமூர்த்தி பாலியல் தொந்தரவு செய்துள்ளான். மாணவர் கூச்சலிட்டதால், கிராமத்தினர் திருமூர்த்தியை கண்டித்து, ஊருக்குள் நுழைய தடை விதித்தனர். எனவே, திருமூர்த்தியை தன்னுடன் காய்கறி வியாபாரத்துக்கு, ரூபா அழைத்து சென்றார்.
இந்நிலையில், கடந்த, 1ம் தேதி இரவு, தெலுங்கனுாரில் உள்ள வீட்டுக்கு திருமூர்த்தி வந்தான். 2ம் தேதி மாலை, திருமூர்த்தி வீட்டின் பக்கத்து தெருவில் வசிக்கும் ராஜாவின் மகள் தர்ஷிணியை காணவில்லை.

அன்று நள்ளிரவு திருமூர்த்தி வீட்டில், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதாக, கொளத்துார் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. நேற்று காலை, திருமூர்த்தி வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.இதில், வீட்டின் ஒரு மூலையில் இருந்த ஈய பாத்திரத்தில், சிறுமி தர்ஷிணி உடல் திணித்து வைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதை திருமூர்த்தி ஒப்புக் கொண்டான்.பிஸ்கட் தருவதாக...

இது குறித்து, போலீசார் கூறியதாவது: நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில், சிறுமி தர்ஷிணி, திருமூர்த்தி வீடு வழியாக சென்றாள். அப்போது, திருமூர்த்தி, பிஸ்கட் தருவதாக கூறி, தன் வீட்டுக்குள் அழைத்து சென்றான். பின், 'டிவி'யை மிக சத்தமாக வைத்துவிட்டு,

பூஜை அறையில் வைத்து, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான்.

இதனால், சிறுமியின் அலறல் யாருக்கும் கேட்கவில்லை. மயங்கிய சிறுமியை வெளியில் துாக்கி செல்ல திட்டமிட்டான். ஆனால், வெளியில் இரவு முழுவதும் ஊர் மக்கள், சிறுமியை தேடிக்கொண்டிருந்தனர்.

அதனால், வெளியில் துாக்கி சென்றால் மாட்டி கொள்வோம் என நினைத்து, வீட்டினுள் குழி தோண்டி புதைக்க, முடிவு செய்துள்ளான். சிறிது குழி தோண்டிய நிலையில், அது முடியாததால், புதைக்கும் திட்டத்தை கைவிட்டான்.பின், சிறுமிக்கு மயக்கம் தெளிந்தால் பிரச்னையாகி விடும் என்பதால், அவளது கன்னத்தில் இருந்து வயிறு வரை பிளேடால் கீறி, கொடுரமாக கொலை செய்து, பூஜை அறையில் இருந்த பாத்திரத்தில் போட்டு மூடி விட்டான்.

நேற்று காலை, தாத்தா ராமன் பூஜை அறையை சுத்தம் செய்ய சென்றார். அப்போது, தாத்தாவை உள்ளே அனுமதிக்காமல் திருமூர்த்தி தடுத்தான். சந்தேகம் அடைந்த ராமன், உள்ளே நுழைந்து சிறுமி உடல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் மூலம் மற்றவர்களுக்கு தகவல்
தெரிந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சேலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட சிறுமியின் உடல், நேற்று இரவு தெலுங்கனுாரில் அடக்கம் செய்யப்பட்டது. தெலுங்கனுார் மக்கள், திருமூர்த்தி வீட்டை சூறையாடக்கூடும் என்பதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

காம கிறுக்கன்:தெலுங்கனுார் கிராம மக்கள் கூறுகையில், 'மனநிலை பாதித்த திருமூர்த்தி எது கேட்டாலும், அவரது தாத்தா மற்றும் தாய் வாங்கி கொடுத்து விடுவர். திருமூர்த்தி, ஒரு லேப்டாப், மொபைல் வைத்திருந்தான். அதில், எப்போதும் ஆபாச படங்களையே பார்த்து கொண்டிருப்பான்' என்றனர்.

தினமலர்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல