புதன், 17 ஆகஸ்ட், 2016

வின்டோஸ் 10ல் அன் இன்ஸ்டால்

விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் பல சிறிய புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. இவை தேவையில்லை எனும் பட்சத்தில் அன் இன்ஸ்டால் செய்திட முயன்றால், இவற்றில் அதற்கான ஆப்ஷன் தரப்படவில்லை. எவ்வாறு இவற்றை அன் இன்ஸ்டால் செய்து நீக்கலாம்?



பொதுவாக, விண்டோஸ் 10 சிஸ்டத்தில், புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்வது மிக எளிதான ஒன்றாகத்தான் தரப்பட்டுள்ளது. ஆனாலும் அதனுடன் வந்த புரோகிராம்களை நீக்குவது பலருக்குச் சிரமமாக இருப்பதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இவற்றை நீக்கும் விதம் குறித்து, விண்டோஸ் 10 தெளிவாக குறிப்பிடவில்லை என்பதே உண்மை. இவை எல்லாமே, மிகச் சிறிய புரோகிராம்கள் தான். இவை உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் மிகக் குறைவான இடத்தையே கொண்டிருக்கும். எனவே, இவற்றை நீக்குவதைக் காட்டிலும், மறைத்து வைக்கலாம்.

மறைத்து வைக்க,

Start மெனு சென்று, நீக்கப்பட வேண்டிய புரோகிராமின் டைல் மீது ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் மெனுவில், Unpin from Start என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டார்ட் மெனுவிலிருந்து நீக்கிவிட்டால், அவை இணையத் தேடலின் போது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாது.

அப்டேட் செய்திடும் செய்தியை அனுப்பாது.

இருந்தாலும், நீங்கள் நீக்கவே விரும்புகிறீர்களா?

சில புரோகிராம்கள், எடுத்துக் காட்டாக, News, Money, மற்றும் Get Office போன்றவற்றை வழக்கமான வழிகளில் நீக்கிவிடலாம்.

இவற்றின் டைல் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Uninstall என்பதைத் தேர்ந்தெடுத்தால் போதும். மீண்டும் ஒரு முறை உங்களிடம் உறுதி செய்து கொண்டு, புரோகிராம் அன் இன்ஸ்டால் ஆகும்.

ஆனால், இது எல்லா புரோகிராம்களுக்கும் பொருந்தி வரவில்லை. எடுத்துக் காட்டாக, Films & TV, Groove Music, மற்றும் People போன்ற புரோகிராம்களில் இந்த அன் இன்ஸ்டால் ஆப்ஷன் கிடைக்காது.

இதற்கு Priform நிறுவனத்தின் CCleaner புரோகிராம் உங்களுக்கு உதவி செய்திடும். சிகிளீனர் புரோகிராமினைத் திறந்து, Tools > Uninstall எனச் செல்லவும்.

பின்னர், அங்கு கிடைக்கும் பட்டியலில், நீக்கப்பட வேண்டிய புரோகிராமினைத் தேர்ந்தெடுக்கவும்.

புரோகிராம் முழுமையாக நீக்கப்பட்டுவிடும்.

சிகிளீனர் தரும் பட்டியலில் நாம் காண முடியாத புரோகிராம், விண்டோஸ் 10 கொண்டிருக்கும் பிரவுசர் புரோகிராமான Edge ஆகும். இதனை அன் இன்ஸ்டால் செய்திட முடியாது.

இது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், மாறா நிலையில் (Default) இயங்கும் பிரவுசராக, உங்களுக்குப் பிடித்த பிரவுசரைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.

பின்னர் எட்ஜ் பிரவுசர் புரோகிராமினை, டாஸ்க்பார் மற்றும் ஸ்டார்ட் மெனுவிலிருந்து எடுத்துவிடவும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல