புதன், 17 ஆகஸ்ட், 2016

தமிழினி உட்பட இறந்த மூன்று பெண் போராளிகளும் இயக்கத்திலேயே நோயாளிகள்தான்!

தமிழினிக்கோ அல்லது சிவரதிக்கோ இயக்கத்திற்கு வெளியில் வந்து புற்றுநோய்வரவில்லை. அவர்களுக்கு இயக்கத்தில் இருக்கும் போதே புற்றுநோய்தான் என தமிழீழவிடுதலைப்புலிகளின் மூத்த போராளியான தமிழ்கவி தெரிவித்தார்.



வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள்கருத்தறியும் செயலணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறுதெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

புனர்வாழ்வு முகாமுக்கு போனார்கள், அங்கு எதையோ கொடுத்தார்கள். அதனால் இறந்துவிட்டார்கள் என சொல்கின்றர்ர்கள்.

ஆனால் நாங்கள் இயக்கத்தில் சிவரதி என்றபிள்ளையை பாரிய வேலைகளுக்கு எடுப்பதே இல்லை. அவருக்கு இலகுவான வேலையேகொடுக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அவர் ஏற்கனவே நோயாளிதான்.

எனக்கு தெரிய இறந்ததமிழினி, சிவரதி உட்பட மூன்று பெண் போராளிகளும் ஏற்கனவே நோயாளிகள்தான்.அவர்களுக்கு ஏற்கனவே புற்று நோய் இருந்தது.

நான் ஒரு முன்னாள் போராளி.இறுதிக்கட்டம் வரை போராட்டத்தை சந்தித்தவர் நான். அதன் பின்னர் புனர்வாழ்வுமுகாமில் இருந்து விடுவிக்கப்பட்டேன். எமக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

கையில் ஒரு சொப்பின் பையுடன் வட்டுவாகல் பாலத்தின் ஊடாக வந்தோம். புனர்வாழ்வுமுடிந்து வந்த போது கையை வீசிக்கிக்கொண்டே வந்தோம்.

ஆனால் 15 நாட்களுக்குஒருமுறை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் வந்து பார்ப்பார்கள்.உதவி செய்வம் என்பார்கள், கூட்டம் வைப்பார்கள், அது தரவா இது தரவா என்பார்கள்.எல்லாம் கேட்பார்கள் ஆனால் ஒரு பூனையும் வராது.

இதற்குள்தான் நாம்எதிர்நீச்சல் அடித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்தில் இவ்வாறானபோர் இடம்பெறாது இருப்பதற்காகத்தான் நாம் இன்று நல்லிணக்கம் பற்றிபேசிக்கொண்டிருக்கின்றோம்.

ஆனால் இந்த நல்லிணக்கம் மனங்களால்ஏற்படுத்தப்பட வேண்டியதே தவிர அரசியல்வாதிகளால் ஏற்படுத்த முடியாதது.எங்களுக்குள் மன மாற்றம் வரவேண்டும்.

சிங்கள மக்கள் எங்களுக்கு எதிரானவர்கள்அல்ல. ஏனெனில் நான் விடுதலைப் புலியாகவே வெளியில் வந்த பிறகு கொழும்பு, அனுராபுரம் போன்ற பிரதேசங்களுக்கு சென்றிருக்கின்றேன்.

முச்சக்கரவண்டியில்சிங்கள சாரதியுடன் சென்ற போது யுத்தம் தொடர்பாக கதைத்தேன். அப்போது அவர்எவ்வாறு சரியாக சொல்கின்றீர்கள் என்றார். நான் விடுதலைப்புலி என்றேன். அப்போதுஅவர் கூறினார். நான் பாக்கியம் செய்தவன் விடுதலைப்புலி உறுப்பினரைசந்தித்திருக்கின்றேன் என்றார்.

ஏனெனில் அவர்களிடம் வேற்றுமையும் இல்லைவிரோதமும் இல்லை.நாங்கள் உரிமைக்காகத்தான் போராடினோம். அதற்காகவே உயிரைக்கொடுத்தோம். ஆனால்இந்த நாட்டில் மாதிரமே விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக சொல்கின்ற நிலைஉள்ளது.

இன்றும் கூட பயங்கரவாதம் என்ற சொல் அரசாங்கத்தின் எந்த அறிக்கையில்இருந்தும் அகற்றப்படவில்லை. அந்த பயங்கரவாதம் என்ற சொல் இருக்கும் வரைஎங்களிடம் ஆறுதலை பார்க்க முடியாது.

ஒருவர் இந்த அவையில் புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து பெண்களை கடத்திச்சென்றுஇராணுவம் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக தெரிவித்தார். அவர் அங்கு என்னபார்த்துக்கொண்டா இருந்தார்.

புனர்வாழ்வு முகாமில் இருந்து 2000 பெண்களுக்குமேல் வெளியில் வந்துள்ளோம். புனர்வாழ்வு முகாமுக்குள் ஆண்கள் வரவும் முடியாதுவந்ததும் இல்லை.

வெளியில் கொண்டு செல்வதாக இருந்தாலும் இரண்டு பெண்பொலிஸாருடன் தான் கூட்டிச்செல்ல முடியும்.ஆனால் போராளி என்று சொல்லாமல் எங்காவது ஒழித்திருந்து பின்னர் பக்கத்துவீட்டுக்காரரால் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு என்னாவதுநடந்ததா என்பது தெரியாது.

புனர்வாழ்வு முகாமில் இருந்த பெண்களுக்கு எதிராக அவதூறு பேசுபவர்களுக்குஎதிராக மான நஸ்ட வழக்கு போடுவோம். ஊடகங்களும் நல்லிணக்கத்திற்கு எதிராகசெயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

ஊடகங்கள் சரியாக செயற்பட்டிருந்தால்நல்லிணக்கம் எப்போதோ வந்திருக்கும்.இதேவேளை தமிழ் பிரதேசங்கள் எங்கும் சிங்கள உயர் அதிகாரிகள்நியமிக்கப்படவேண்டும்.

அப்போதுதான் தமிழர்கள் அவர்களிடம் ஒவ்வொரு தேவைக்கும்போகும் போதும் அவர்களுக்கு தமிழர்களின் பிரச்சினை புரியும் என தெரிவித்தார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல