திங்கள், 29 ஆகஸ்ட், 2016

விண்டோஸ் 10ல் வெப் கேமராக்கள் திடீரென வேலை செய்யவில்லை.

இந்தப் பிரச்னை பலருக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. பலருக்கு என்றால், ஏறத்தாழ பல லட்சம் பேருக்கு மேலாக. புதியதாகத் தரப்பட்ட மேம்படுத்தல் கோப்பு, வெப் கேமராக்கள் மேற்கொள்ளும் விடியோ இமேஜ் ஸ்ட்ரீமிங் பணியைச் செம்மைப் படுத்த பல வழிகளைக் கொண்டதாக இருந்தது.



ஏற்கனவே இருந்த முறையை ஒழுங்கு படுத்தி, அனைத்து வெப் கேமராக்களும் எளிதாகச் செயல்படும் வகையில் சீரமைப்பதற்கென சில வழிமுறைகள் தரப்பட்டன. ஆனால், இலக்குக்கு மாறாக, பல லட்சம் கம்ப்யூட்டர்களில் இணைக்கப்பட்ட வெப் கேமராக்களையும், சார்ந்த சாதனங்களையும் இது முடக்கிவிட்டதாகத் தெரிகிறது.

குறிப்பாக Logitech C920 வெப் கேமரா பயன்படுத்தியவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் வந்துள்ளது.

இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகார பூர்வ வாடிக்கையாளர்களுக்கான குறை தீர்க்கும் வலை மனையில், இதற்கான தீர்வினை உருவாக்கப் பலரும் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் தீர்வு தரப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

இதனைத் தீர்க்க தற்போதைக்கு ரெஜிஸ்ட்ரி பதிவுகளை மாற்றி செயல்படலாம். ஆனால், அதில் சிக்கல் வந்துவிட்டால், நிலைமை இன்னும் மோசம் ஆகிவிடும்.

எனவே, தற்போதைக்கு வேறு வெப்கேமரா அல்லது வேறு சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களில், விடியோ சேட்டிங் போன்ற பணிகளை மேற்கொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு மைக்ரோசாப்ட் இணைய தளத்தை அணுகலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல