புதன், 31 ஆகஸ்ட், 2016

ஈழத் தமிழர் திருமண தாலியில் திருவள்ளுவர், பிரபாகரன் உருவம் பொறித்த தங்ககாசுகள்!

கனடாவில் மணாமகன் ஒருவர் புலி தலைவர் பிரபாகரன் மற்றும் திருவள்ளுவர் ஆகயோரின் உருவங்களை தங்க காசில் பொறித்து அதை தாலியாக மணமகள் கழுத்தில் அணிவித்துள்ளார்.




கனடாவில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களான கார்த்திக் மற்றும் மீரா ஆகியோர் தங்களின் திருமணத்தினை ஒரு அடையாளத்துடன் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டனராம்.

இதையடுத்து விடுதலைப்புலிகள்  தலைவர் வே.பிரபாகரன் உருவத்தை தங்ககாசு ஒன்றில் பொறித்தனர். மறுபக்கம் விடுதலைப்புலிகள் அமைப்பின் புலி உருவம் இருந்தது.

மற்றொரு காசில் திருவள்ளுவரின் உருவம் இருந்தது. நடுநாயகமாக தங்கத்தாலி இருக்க இருபுறமும் அந்த காசுகள் கோர்க்கப்பட்டது.

அந்த தாலியை மணமகள் மீராவின் கழுத்தில் கட்டினார் கார்த்திக். பின்னர் இருவரும் பிரபாகரன் சிலை முன்பாக நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனராம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல