புதன், 24 ஆகஸ்ட், 2016

பிரான்ஸ் கடற்­க­ரையில் முஸ்லீம் பெண்ணின் மேலாடையை களையவத்த பொலிஸார் (படங்கள் இணைப்பு)

பிரான்ஸின் நீஸ் நக­ரி­லுள்ள கடற்­க­ரையில் உடலை முழு­மை­யாக மறைக்கும் வகையில் நீச்­ச­லு­டைக்கு மேலாக மேலாடை அணிந்து சூரிய குளி­யலில் ஈடு­பட்ட பெண்­ணொ­ருவர் ஆயு­தந்­தாங்­கிய பொலி­ஸாரால் தனது மேலா­டையைக் களைய நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட சம்­பவம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.



அண்­மையில் சுதந்­திர தினக் கொண்­டாட்­டங்­களின் போது டிரக் வண்­டி­யொன்றைப் பயன்­ப­டுத்தி தாக்­குதல் நடத்­தப்­பட்ட பிர­தே­சத்­தி­லி­ருந்து சில யார்கள் தொலைவில் புரொ­மெனட் டெஸ் அங்லெயிஸ் கடற்­க­ரையில் குறிப்­பிட்ட பெண் அமை­தி­யாக சூரிய குளி­யலில் ஈடு­பட்­டி­ருந்த வேளை அவரை மிளகு தூள் பிர­யோக உப­க­ரணம் மற்றும் குண்­டாந்­த­டி­க­ளுடன் நெருங்­கிய 4 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் அவரை நோக்கி மிளகு தூள் பிர­யோக உப­க­ர­ணத்தைப் பிடித்­த­வாறு உடலை முழு­மை­யாக மறைக்கும் வகை யில் அணிந்­தி­ருந்த மேலா­டையைக் களைய அவரை நிர்ப்­பந்­தித்­துள்­ளனர்.

அதே­ச­மயம் அங்கு தலையை மறைக்கும் ஆடை அணிந்து நட­மா­டிய 34 வயது பெண்­ணொ­ரு­வ­ருக்கு தண்டப் பணத்தை செலுத்த பொலிஸார் உத்­த­ர­விட்­டுள்­ளனர்.

மேற்­படி சம்­ப­வத்­துக்கு சில நாட்­க­ளுக்கு முன்னர் கேன்ஸ் கடற்­க­ரையில் உடலை முழு­மை­யாக மறைக்கும் நீச்­ச­லுடை அணிந்­தி­ருந்த நான்கு பெண்­க­ளுக்கு 38 யூரோ தண்டப் பணம் விதிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல