லொறியொன்றின் அடிப் பகு தியில் தோல் பட்டிகளால் தன் னைத்தானே கட்டித் தொங் கியவாறு இத்தாலிக்குள் 250 மைல்கள் தூரம் பயணித்த ஆப்கான் குடியேற்றவாசியொருவர் இத்தாலிய பொலிஸாரிடம் வசமாகச் சிக்கியுள்ளார்.
லொறியின் கீழ்ப் பகுதியில் அபாயகரமான முறையில் தொங்கியவாறு மேற்படி குடியேற்றவாசி பயணம் செய்வதை அவதானித்த அவ்வழியாக சென்ற மோட்டார் வாகன சாரதிகள் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறி வித்துள்ளனர்.
தென் இத்தாலியிலுள்ள பிறின்டிஸி நக ரில் வைத்து குறிப்பிட்ட குடியேற்றவாசி தோல் பட்டிகளைப் பயன்படுத்தி அந்த லொறியில் தன்னைப் பிணைத்துக் கொண்டதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் அவர் நப்லஸுக்கும் ரோமிற் கும் இடையில் லாஸியோ பிராந்தியத்தி லுள்ள நெடுஞ்சாலையில் வைத்து பொலி ஸாரால் பிடிக்கப்பட்டார்.
துருக்கியிலிருந்து ஸ்பெயினுக்கு பயணத்தை மேற்கொண்டிருந்த அந்த லொறி யைச் செலுத்திய பல்கேரியாவைச் சேர்ந்த சாரதியும் துணைச் சாரதியும் தமது வாகனத்தின் கீழ் குடியேற்றவாசியொருவர் இரு தோல் பட்டிகளின் துணையுடன் தொங்கியவாறு பயணம் செய்வதை அறியாதிருந்துள் ளனர்.
கடும் சோர்வால் பாதிக்கப்பட்டிருந்த அந் தக் குடியேற்றவாசி பின்னர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவருக்கு இத்தாலியை விட்டு வெளியேற 7 நாள் கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.
அதேசமயம் குறிப்பிட்ட பல்கேரிய சாரதிகளுக்கு பயணத்தைத் தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த வருட ஆரம்பத்திலிருந்து இத்தாலியை 100,000 க்கு மேற்பட்ட குடியேற்ற வாசிகள் வந்தடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக