வெள்ளி, 28 அக்டோபர், 2016

ஆண்டவர் அப்பலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கல்கி பகவான். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது.


கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். எல்ஐசி முகவராக இருந்தவர். இவரது மனைவி பெயர் புஜ்ஜம்மா. தற்போது இவர் தனது பெயரை அம்மா பகவான் என்று மாற்றியதோடு தான் பத்மாவதி தாயாரின் அவதாரம் என்றும் கூறி வந்தார்.

இவருக்கு தமிழக, ஆந்திரா எல்லைப் பகுதிகளில் ஆசிரம்மங்களும் உள்ளது. உலகத்தை காப்பாற்ற வந்த கல்கி அவதாரம் என கூறிவந்தது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் கல்கி பகவான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிரிட்டிக்கல் கேர் யூனிட்டில் கல்கி அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்த அவரது பக்தர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வருகிறார்கள். இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவும் அங்கு சிகிச்சை பெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பக்தர்கள் மருத்துவமனை வளாகம் முன்பு குவிவதால் அவர்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறைக்கும் கல்கி பகவான் பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பக்தர்கள் கல்கி பகவானை பார்க்க அப்பல்லோவுக்கு வரவேண்டாம் என அன்பு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல