செவ்வாய், 31 ஜனவரி, 2017

எக்ஸெல் டிப்ஸ்... பைலை விரும்பும்போது பார்க்க.. எக்ஸெல் ஸ்குரோலிங்

எக்ஸெல் பைலை விரும்பும்போது பார்க்க: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை அழுத்தினாலும் இந்த விளைவு ஏற்படும்.



நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பைல் மறைக்கப்பட்டுவிடும். விண்டோ மெனு சென்று தற்போது திறந்திருக்கும் பைல்களின் பட்டியலைப் பார்த்தாலும் அதில் இந்த பைல் இருக்காது. சரி. இப்போது அந்த பைலை மீண்டும் திறந்து பணியாற்ற விரும்புகிறீர்களா? மீண்டும் விண்டோ மெனு சென்று அன்ஹைட் (Unhide) என்பதனைக் கிளிக் செய்யலாம். அல்லது ஆல்ட் + டபிள்யூ + யு ஆகிய கீகளை அழுத்தலாம். அப்போது ஒரு விண்டோ திறக்கப்பட்டு அதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பைல்கள் அனைத்தும் காட்டப்படும். நீங்கள் எந்த பைலை மறைத்து வைத்ததிலிருந்து மீட்க விரும்புகிறீர்களோ அந்த பைலின் பெயர் மீது கிளிக் செய்து அதனைத் திறந்து பணியாற்றலாம்.

இப்போது ஒரு சந்தேகம் உங்களுக்கு வரலாம்? மறைக்கப்பட்ட பைலை மீண்டும் கொண்டு வராமல் எக்ஸெல் புரோகிராமை மூடிவிட்டால் என்ன நடக்கும்? அடிப்படையில் பார்க்கையில் எக்ஸெல் புரோகிராமை மூடும்போது, அப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பைலை பதியவா என்று கேட்கும். மற்ற பைல்களை மூடும்போது சேவ் செய்ய அல்லது வேண்டாம் என நினைத்தால் அதற்கேற்றார்போல் யெஸ் / நோ கொடுத்து வெளியேறலாம்.

இங்கே வேறுபாடு என்னவென்றால் நீங்கள் மறைத்து பின் மீண்டும் திறக்காமல் விட்ட பைலைத் திறக்க பின்னொருமுறை கட்டளை கொடுத்தால், பைல் திறந்து உடனே மறைக்கப்பட்டுவிடும். மீண்டும் விண்டோ மெனு சென்று Unhide பட்டனை அழுத்த பைல் மீண்டும் பயன்படுத்தக் கிடைக்கும். எனவெ அய்யோ போய்விட்டதே! என்ற கவலை வேண்டாம்.

எக்ஸெல் ஸ்குரோலிங்: எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றில் நிறைய செல்களில் தகவல்களை அமைத்திருக்கிறீர்கள். அவற்றை ஆய்வு செய்கையில் ஸ்குரோல் செய்து கீழாக ஒரு செல்லில் இருக்கிறீர்கள். திடீரென ஆரோ கீ ஒன்றை அழுத்துகிறீர்கள். என்ன நடக்கிறது? மீண்டும் நீங்கள் எந்த செல்லில் உங்கள் கர்சரை நிறுத்தியிருந்தீர்களோ அந்த செல்லுக்கு இழுத்துச் செல்லப்படுகிறீர்கள்.

உங்களுக்கு வியப்பு! என்ன நடக்கிறது இங்கு? ஏறத்தாழ 100 வரிசைகள் தாண்டி நான் இருந்தேனே? எப்படி பழைய இடத்திற்கு வந்தேன் என்று தானே வியக்கிறீர்கள்.

புரோகிராம் ஏன் இப்படி தவறுதலாகச் செயல்படுகிறது? அதுதான் இல்லை. நீங்கள் ஸ்குரோல் பாரைப் பயன்படுத்தி அல்லது மவுஸின் ஸ்குரோலைப் பயன்படுத்தி கீழாக அல்லது மேலாகச் செல்கையில் திரையில் காணப்படும் காட்சி தான் மாறுகிறது. புதிய செல்களுக்கு நீங்கள் செல்லவில்லை.

எனவே நீங்கள் ஆரோ கீயை அழுத்தியவுடன் அது நீங்கள் இருந்த செல்லுக்கு ஒரு செல் மேலாகவோ அல்லது கீழாகவோ செல்கிறது. எனவே தான் நீங்கள் ஸ்குரோல் செய்து சென்ற இடத்திலிருந்து உடனடியாகக் கர்சர் இருந்த செல்லுக்கு அருகே நீங்கள் அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். ஸ்குரோல் செய்து அடைந்த இடத்திற்கு உங்கள் கர்சர் இருக்க வேண்டும் என்றால் மவுஸால் அதனை செலக்ட் செய்திட வேண்டும்.

இவ்வாறு ஸ்குரோல் செய்து சுற்றி வருவதும் நல்லதுதான். ஒரு செல்லில் தகவல் இடுகையில் மற்ற செல்களில் என்ன உள்ளது என்று பார்க்க விரும்பினால் என்டர் செய்து சென்றால் எங்கு நீங்கள் பணியாற்றிக் கொண்டிருந்தீர்கள் என்பது மறந்துவிடும் அல்லவா? எனவே ஸ்குரோல் செய்து சுழன்று சென்று பின் மீண்டும் செயல்படும் செல்லுக்கே வரலாமே.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல