இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் தங்களுக்கு எந்த தொடர்புமே இல்லை என மீண்டும் தெரிவித்துள்ளது லைக்கா நிறுவனம். ஆனால் இப்போதும் லைக்காவின் சிஇஓவாக இருக்கும் கிறிஸ்டோபர் டூலே, ராஜபக்சே குடும்பத்தின் ஸ்கை நெட் ஒர்க் போர்டு மெம்பராக இருந்தவரே.
இது தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு முன்னரே நமது ஒன் இந்தியா தமிழில் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம். தற்போது ரஜினியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டதை சகிக்க முடியாமல் தமிழக அரசியல்வாதிகளை பொய்யர்களாக, வதந்தி பரப்புவர்களாக சேறுவாரி பூசியுள்ளது லைக்கா.
ஆனால் உண்மையில் லைக்கா நிறுவனம் ராஜபக்சே குடும்பத்தின் பினாமிதான் என்பதற்கான ஆதாரங்கள்:
Thatstamil
இது தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு முன்னரே நமது ஒன் இந்தியா தமிழில் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம். தற்போது ரஜினியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டதை சகிக்க முடியாமல் தமிழக அரசியல்வாதிகளை பொய்யர்களாக, வதந்தி பரப்புவர்களாக சேறுவாரி பூசியுள்ளது லைக்கா.
ஆனால் உண்மையில் லைக்கா நிறுவனம் ராஜபக்சே குடும்பத்தின் பினாமிதான் என்பதற்கான ஆதாரங்கள்:
- மகிந்த ராஜபக்சேவின் சகோதரி ஜெயந்தி ராஜபக்சேவின் மகன் ஹிமல் லீலந்திர ஹெட்டியராச்சி. இவர் ஸ்கை நெட் ஒர்க் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர். ஆதாரம்
- 2007ஆம் ஆண்டு ஸ்கை நெட் ஒர்க் நிறுவனத்தின் 95% பங்குகள் லைக்கா குழுமத்தின் தாய் நிறுவனமான ஹேஸ்டிங்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்படுகிறது. ஆனால் 5% பங்குகளை வைத்திருக்கும் ராஜபக்சேவின் மைத்துனரே ஸ்கை நெட் வொர்க்கின் இயக்குநராகவும் நீடிக்கிறார். அதன் பின்னர் ஸ்கை நெட் ஒர்க் குழுமத்தின் போர்டு மெம்பர்களாக, லைக்காவின் மிலிந்த் காங்லி (முன்னாள் சி.இ.ஓ லைக்கா), கிறிஸ்டோபர் டூலே(இந்நாள் லைக்கா சிஇஓ) , ஹிமல் லீலந்திர ஹெட்டியராச்சி ஆகிய மூவர்தான் இடம்பெற்றனர். அதாவது ஸ்கை நெட் ஒர்க்கும் லைக்காவும் 2008ஆம் ஆண்டே ஒரே நிறுவனமாகிவிட்டது.
- இதை இலங்கையில் இருந்து வெளியான சண்டே லீடர் பத்திரிகை 2008ஆம் ஆண்டு ஆதாரங்களுடன் வெளியிட்டது. ஆதாரம் இதன் பின்னரே இந்த சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த படுகொலை செய்யப்படுகிறார்.
- இங்கிலாந்தின் ஹப்பிங்டன்போஸ்ட்டிலும் லைக்கா - ராஜபக்சே குடும்ப உறவு தொடர்பான கட்டுரை வெளியானது.
- இதைத் தொடர்ந்து லைக்கா நிறுவனத்துக்கும் ராஜபக்சே குடும்பத்துக்குமான தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இங்கிலாந்து எம்.பி. டோம், அந்நாட்டு பிரதமர் கேமரூனுக்கு கடிதம் அனுப்பினார். ஆதாரம்:
- அப்போது ஒட்டுமொத்த தமிழகமே காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி வந்தது. இதை ஏற்று பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கும் கலந்து கொள்ளாமல் இருந்தார். ஆனால் ராஜபக்சே நடத்திய காமன்வெல்த் மாநாட்டுக்கு முட்டுக் கொடுத்தது இந்த பினாமி லைக்கா நிறுவனம்தான்.
- காமன்வெல்த் மாநாட்டின் வர்த்தக மாநாட்டுக்கு கோல்டன் ஸ்பான்சர் பெற்ற ஒரே ஒரு நிறுவனம் "ஈழத் தமிழர்" ஒருவரை தலைவராகக் கொண்ட லைக்கா நிறுவனம் என்பதுதான். இதே காமன்வெல்த் மாநாட்டில் ராஜபக்சேவின் மைத்துனரின் ஸ்கை நெட் ஒர்க்கின் போர்டு மெம்பர்களில் ஒருவரும் லைக்காவின் அப்போதைய சி.இ.ஓவுமான காங்லி பங்கேற்றார்.
- லைக்கா குழுமத்தின் தற்போது சி.இ.ஓவாக இருப்பவர் கிறிஸ்டோபர் டூலே. ராஜபக்சே மைத்துனரின் ஸ்கை நெட் ஒர்க்கின் போர்டு மெம்பராக இருந்த நபர்தான் லைக்காவின் சி.இ.ஓ. ஒரே குழும நிறுவனம் என்பதாலே ராஜபக்சேவின் மைத்துனரின் ஸ்கை நெட் ஒர்க்கில் இருந்த இருவரே இதுவரை லைக்காவின் சி.இ.ஓக்களாக நியமிக்கப்பட முடிகிறது.
- அதாவது ராஜபக்சே குடும்பத்தின் பினாமியாக மட்டுமே லைக்கா நிறுவனம் செயல்படுகிறது என்பதையே இவையெல்லாம் ஆதாரங்களாக காட்டுகின்றன
Thatstamil



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக