வெள்ளி, 14 ஏப்ரல், 2017

வேர்ட் டிப்ஸ்... Grammar Checker... அமைப்பினை அறிய... ஹைபன்

இணைப்புச் சொற்களுடன் தொடங்கும் வாக்கியங்களைக் கண்டறிய
வேர்ட் புரோகிராமில், இணைத்துத் தரப்பட்டிருக்கும், இலக்கண சோதனைக்கான செயலி, (Grammar Checker) நாம் எழுதும் பாங்கினை (ஸ்டைல்) சோதனை செய்து அறிவிக்கும், ஓர் அற்புதமான செயலியாகும். நாம் அமைக்கும் ஆங்கில வாக்கியங்கள், ஏதேனும் இணைப்புச் சொற்களில் (Conjunction (e.g. and, but / hopefully)) தொடங்குகின்றனவா என்ற சோதனை, இதில் நமக்குக் கிடைக்கும் உதவிகளில் சிறப்பானதாகும்.


இது போன்ற வாக்கியங்களை சோதனை செய்து, அதில் அவை இருப்பதனை அறிந்தால், வேர்ட் சுட்டிக் காட்ட வேண்டும் என எண்ணினால், கீழே தந்துள்ளபடி செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.

1. முதலில் Word Options டயலாக் பாக்ஸினைத் திறக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, கீழாக உள்ள Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.

2. இங்கு இடதுபுறமாக உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, Settings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸினைக் காட்டும்.

3. இங்கு தரப்பட்டிருக்கும் Options பட்டியலில், ஸ்குரோல் செய்து செல்லவும்.

4. ஸ்டைல் பிரிவில், Sentences Beginning with And, But, and Hopefully என்று இருப்பதைக் காணவும். இதில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.

5. தொடர்ந்து, Grammar Settings டயலாக் பாக்ஸினையும், வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸையும் மூடி வெளியேறவும்.

இனி, நீங்கள் அமைக்கும் வாக்கியங்களின் தொடக்கத்தில், இணைப்புச் சொற்கள் இருப்பின், அதனை வேர்ட் சிறிய ப்ளாக் மூலம் சுட்டிக் காட்டும்.

வேர்ட் டாகுமெண்ட்டின் அமைப்பினை அறிந்து கொள்ள

வேர்ட் புரோகிராமில், நாம் அமைக்கும் டாகுமெண்ட்கள் குறித்த அனைத்து புள்ளி விபரங்களை நமக்கு எடுத்துச் சொல்ல டூல் ஒன்று உள்ளது. டாகுமெண்ட் ஒன்றில், எத்தனை பக்கங்கள், சொற்கள், எழுத்துகள் சொற்கள், பத்திகள் உள்ளன என்று அந்த டூல் பட்டியலை நமக்குத் தருகிறது. இந்த டாகுமெண்ட் புள்ளி விபரங்கள் எப்படி காட்டப்படுகின்றன என்று பார்க்கலாம்.

முதலில், சம்பந்தப்பட்ட டாகுமெண்ட்டினைத் திறக்கவும். பின்னர் “Review” டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள “Proofing” பிரிவில், “Word Count” என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது “Word Count” பாக்ஸ் காட்டப்படும். இதில் பக்கங்கள், சொற்கள், ஸ்பேஸ் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட எழுத்துகள், ஸ்பேஸ் உடன் பயன்படுத்தப்பட்ட எழுத்துகள், பாராக்கள் மற்றும் வரிகள் ஆகியவை எத்தனை என்று பட்டியல் போட்டுக் காட்டப்படும். டாகுமெண்ட்டின் பக்கங்கள் மற்றும் சொற்கள் குறித்த தகவல்களை வேர்ட் விண்டோவின் கீழாக உள்ள ஸ்டேட்டஸ் பாரிலும் காணலாம். இதற்கு, உங்கள் டாகுமெண்ட் “Print Layout” அல்லது “Draft” வியூவில் இருக்க வேண்டும். வியூ டேப் பயன்படுத்தி இதனைப் பெறலாம். பெற்ற பின்னர், டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்தால், மேலும் என்ன தகவல்களை ஸ்டேட்டஸ் பாரில் காட்டும்படி அமைக்கலாம் என்பது தெரியவரும்.

வேர்ட்: ஹைபன்
வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை. ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே பிரிக்க முடியாத ஹைபன்கள் இந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.

இதற்கு அந்த ஹைபன் அல்லது டேஷ் அமைக்கையில் கண்ட்ரோல் மற்றும் ஷிப்ட் கீகளை ஒரு சேர அழுத்திக் கொண்டு அமைக்க வேண்டும். பிரிக்க முடியாத ஹைபன்களை வேறு ஒரு வகையிலும் அமைக்கலாம்.

1. இன்ஸெர்ட் மெனு சென்று சிம்பல் என்றிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது இன்ஸெர்ட் சிம்பல் டயலாக் பாக்ஸைக் கொடுக்கும்.

2. இந்த சிறிய விண்டோவில் ஸ்பெஷல் கேரக்டர்ஸ் டேப்பில் கிளிக் செய்திடவும்.

3. இதன் பின் நான் பிரேக்கிங் ஹைபன் கேரக்டரை ஹைலைட் செய்திடவும்.

4. பின்னர் இன்ஸெர்ட் என்பதில் கிளிக் செய்திடவும்.

5. அடுத்து கேன்சல் என்பதில் கிளிக் செய்வதன் மூலம் டயலாக் பாக்ஸை மூடவும்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல