சனி, 6 மே, 2017

ஒரு நாளைக்கு 40 சிகரெட் புகைத்த குழந்தை... இப்ப 9 வருடத்திற்கு பிறகு எப்படியுள்ளார் என்று தெரியுமா? (படங்கள்)

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவினை சேர்ந்த ஆர்டி ரிசால் என்ற குழந்தை ஒரு நாளைக்கு 40 சிகெரட் புகைப்பதாக கடந்த 2010ஆம் ஆண்டு புகைப்படத்துடன் செய்தி வெளியானது.



2வயது புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆர்டி ரிசால், 40 சிகெரட் புகைப்பது குறித்து வெளியான புகைப்படம் மற்றும் காணொளி உலகம் முழுவதும் வைரலானது.

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த இந்தோனேஷிய அரசு , குழந்தைகள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

குழந்தை ஆர்டி ரிசாலுக்கு புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த, சிறப்பு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கத் தொடங்கியது.

தலைநகர் ஜகார்தாவுக்கு அனுப்பப்பட்ட சிறுவனுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதனிடையே புகைப்படிக்கும் பழக்கத்தில் இருந்து 2013 ஆண்டு விடுதலையான ஆர்டி, பின்னர் உணவுக்கு அடிமையானார்.

அதிகப்படியான உணவை சாப்பிட்டதால் ஐந்து வயதில் ஒரு குழந்தையின் பரிந்துரைக்கப்பட்ட எடையை விட 6கிலோவுக்கும் அதிகமாக 24 கிலோவாக காணப்பட்டுள்ளார்.

எனினும் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையுடன் தற்போது ரிசாலுக்கு உணவு கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை புகைப்பழக்கம் மற்றும் முறையற்ற உணவுப்பழக்கம் ஆகியவற்றில் இருந்து விலகி, ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வரும் ரிசால், பாடசாலையில் ஏனைய மாணவர்களை விட சிறப்பாக கல்வி கற்பதாகவும் ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குவதாகவும் பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.














Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல