வியாழன், 4 மே, 2017

பெண்களைப் பெரிதும் கவர்ந்து வரும் பாஹுபலி சேலைகள்!

கோடிக்கணக்கான பாஹுபலி ரசிகைகளுள் ஒருவரான தெலுங்கு பெண் எழுத்தாளர் ரஜினி சகுந்தலா, பாஹுபலி இரண்டாம் பாகத்தை முன்னிட்டு விசேடமாக சேலையொன்றை வடிவமைத்து அணிந்துகொண்டமை சமூக வலைதளங்களில் பிரசித்தமாகி வருகிறது.



பாஹுபலி இரண்டாம் பாகம் வெளியாகவிருந்ததைக் கொண்டாடும் வகையில் ரஜினி மற்றும் அவரது தோழியர் சிலர், பிரபாஸ் மற்றும் அனுஷ்கா தோன்றும் ஒரு காட்சியை சேலை தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் சேலையில் வடிவமைத்து, பாஹுபலி வெளியான அன்று அவற்றை அணிந்துகொண்டனர்.

முதலில், நெருங்கிய தோழியர்களுக்கிடையே வினியோகிக்கவென ஐம்பது சேலைகளை மட்டுமே தயாரித்து வாங்கிக்கொண்ட ரஜினி, தோழியருடன் அந்தச் சேலைகளை அணிந்துகொண்டு புகைப்படம் பிடித்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.

அதைக் கண்ட பலரும் தமக்கும் அது போன்ற சேலைகளை வாங்கித் தருமாறு கேட்கவே, அடுத்து 500 சேலைகள் தயாரிக்கப்பட்டன. தற்போது, இதுவே ஒரு புதிய போக்காக மாறி, தெலங்கானா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் பாஹுபலி சேலைகள் விரும்பி அணியப்பட்டு வருகின்றன. இதனால், பாஹுபலி சேலைகளின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

இதற்கான காப்புரிமை எதையும் தான் வாங்கவில்லை என்று கூறும் ரஜினி, இதை ஒரு வியாபாரியாக இல்லாமல் ஒரு ரசிகையாகவே தயாரித்து அணிந்துகொண்டேன் என்றும் கூறுகிறார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல