புதன், 3 மே, 2017

நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பது உண்மையா?

பொதுவாக பலர் நெய்யை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த உணவு, ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும். இதுப்போன்று நெய்யில் உள்ள பல நன்மைகளைப் பற்றி இப்போது பார்ப்போமா... 


நெய்யை எப்படி தயாரிப்பது?

பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.

இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். 

நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

நெய்யின் நன்மைகள் : 

நெய்யில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பைக் கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். நெய்யானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து குறைத்துவிடும்.

நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால்,... அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய் படாமல் இருப்பார்கள். 

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்க வைட்டமின்கள் உள்ளன. எனவே தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறலாம். 

குடற்புண் உள்ளவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். 

இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும். இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். 

கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.

வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் தேய்மானம் எதுவும் ஏற்படாமல், அவைகள் நன்கு செயல்படுவதற்கு உதவும். இதனால் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நிறைய மக்களுக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பசுநெய்யை ஹோமத்தில் விடும் போது, அதனால், காற்றில் உள்ள மாசு குறைகிறது. நெய் கலந்த அரிசியை ஹோமத்தில் போடுவதால், அதில் இருந்து அசிட்டிலின், எத்திலீன் ஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்கள் உருவாகின்றன. இவை மனிதனுக்கு ஏற்படும் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, குடல் தொடர்பான நோய்கள் என பல நோய்களை தீர்க்கும் சக்தி பெற்றுள்ளவையாக இருக்கின்றன.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல