வியாழன், 1 ஜூன், 2017

தாயாரைத் தேடி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்ற 12 வயதான சிறுவன்

சாவகச்சேரியைச் சேர்ந்த தந்தை இல்லாத 12 வயதான சிறுவன் , பாட்டியிடமே வளர்ந்து வருவதாகவும், இந்நிலையிலேயே கொழும்பில் தொழில்புரிவதாகக் கூறப்படும் தன்னுடைய தாயைத் தேடி வந்துள்ளதாகவும், திக்குத்தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த நிலையில், தோப்புவ பொலிஸ் வீதி சோதனை சாவடியில் பொலிஸ் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளான்.



கடந்த 28ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொச்சிக்கடை நகரத்திலிருந்து சிறுவன் ஒருவன், அதிகாலை மூன்று மணியளவில், சைக்கிளிலில் பயணிப்பதில் சந்தேகம் கொண்ட நீர்கொழும்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஆனந்த பெர்ணான்டோ, தன்னுடைய காரை அந்த சைக்கிளுக்குப் பின்னால் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், தோப்புவ பாலத்துக்கு அருகில், வீதிச்சோதனைச் சாவடியில், கடமையிலிருந்த பொலிஸார் அதிகாரிகளிடம், அந்த சைக்கிளில் பயணிக்கும் சிறுவன் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காருக்குப் பின்னால் பயணித்து கொண்டிருந்த சிறுவனை, அங்கிருந்த பொலிஸார் பிடித்து விசாரணை செய்தபோதே, மேற்படி விவகாரம் தெரியவந்துள்ளது.

சாவகச்சேரியைச் சேர்ந்த அந்த சிறுவன், கொழும்பில் வேலை செய்யும் தன்னுடைய தாயைத் தேடி, கடந்த 27ஆம் திகதி கொழும்புக்குப் புறப்பட்ட தனியார் பஸ்ஸொன்றில் ஏறியுள்ளார்.

அந்த சிறுவனிடம், பணம் இல்லாமையால், அச்சிறுவனை, பஸ் நடத்துனர். இடைநடுவிலேயே இறக்கிவிட்டு விட்டார்.

புத்தளத்துக்கும் சிலாபத்துக்கும் இடைபட்ட பகுதியிலேயே அச்சிறுவனை, பஸ் நடத்துனர் இறக்கி விட்டுவிட்டார்.

இறக்கிவிடப்பட்ட இடத்தில் இருந்த இரண்டு சைக்கிள்களில் ஒன்றை எடுத்துக்கொண்டே, கொழும்பை நோக்கிப் பயணித்ததாக அச்சிறுவன் தெரிவித்துள்ளார்.

சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வீதி தொடர்பில் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. நீர்கொழும்புக்கு சென்று, விசாரித்தேன், நான் தமிழில் பேசினேன்.

அங்கிருந்தவர்களோ சிங்களத்தில் பேசினார்கள், எனக்கு சிங்களம் புரியாமையால், நான் பயணித்த வீதியிலேயே திரும்பியும் பயணித்தேன் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, அதிகாலையில் சைக்கிளில் பயணித்த அந்தச் சிறுவனைப் பிடித்து, தமிழ்மொழி பேசக்கூடிய அதிகாரியொருவரை அழைத்து, சிறுவனிடம் விசாரணை நடத்தியபோதே மேற்கண்ட விடயம் வெளியானது என்றும் தாயையும் பாட்டியையும் தேடி கண்டுபிடித்து, அச்சிறுவனை ஒப்படைக்க உள்ளதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல