வியாழன், 1 ஜூன், 2017

’ட்ரம்ப்பை மிகவும் பிடிப்பதற்கான காரணமே ’இது’ தான்!’: விளக்குகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

’ஒரு மனிதன் எப்படியிருந்தால் எனக்குப் பிடிக்குமோ, அப்படியே இருக்கிறார் ட்ரம்ப்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து புகழுரை வாசித்துள்ளார், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.



அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை இதுவரை சந்திக்காத ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ட்ரம்ப்பை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அந்த அமெரிக்கத் தலைவரை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபர் குறித்து நேற்று பேசிய ரஷ்யாவின் புதின், ‘எனக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. எளிமையாக, நேர்மையாக, எதையும் வெளிப்படையாகக் கூறும் நபரையே எனக்குப் பிடிக்கும். அப்படிப்பட்ட நபராக இருக்கிறார் ட்ரம்ப். எனக்குப் பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதையும் கடந்து, அவருடன் தனிப்பட்ட முறையிலும் அரசியல்ரீதியாகவும் நல்ல தொடர்பை வளர்த்துக்கொள்ளவே விரும்புகிறேன்’ என்றார்.

மேலும், ‘ட்ரம்ப் போன்றதொரு சிறந்த நிர்வாகிக்கு யாரும் எந்தவொரு அறிவுரையும் வழங்கத் தேவையில்லை’ எனவும் புகழ்ந்தார்.

-vikatan
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல