திங்கள், 25 ஜூன், 2018

தவறாக 'தவறான' படங்களை அப்பாவின் நண்பருக்கு அனுப்பியதால் ஏற்பட்ட வினை

என் வயது 26. என் கணவருக்கு வயது 30. நாங்கள் இருவரும் கல்லூரி பயிலும் போதிலிருந்தே காதலித்து வந்தோம். நான் பேச்சுலர் டிகிரி படித்து வந்த போது, அவர் மாஸ்டர் டிகிரி படித்து வந்தார்.

ஞாயிறு, 24 ஜூன், 2018

67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்


கண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

விமானத்திற்குள் பிச்சையெடுத்த நபர்: வீடியோ!

விமானத்தில் ஒருவர் பிச்சை கேட்கும் வீடியோ ஒன்று பயணி ஒருவரால் வீடியோ  வெளியிடபப்ட்டு வைரலாகி உள்ளது.

ஃபயர்பாக்ஸில் புதிய வசதி | Side View

ஃபயர்பாக்ஸ் பிரவுசரில் சைடுபார் எனும் வசதி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதேபோல இப்போது சைடுவியூ எனும் வசதியை ஃபயர்பாக்ஸ் முன்னோட்ட அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் இரண்டு இணையதளங்களை அருகருகே பார்க்கலாம். அதாவது யூடியூப் வீடியோ பார்த்தபடி ஷாப்பிங் செய்யலாம் அல்லது ட்விட்டர் பதிவுகளைப் பார்த்தபடி வேறு ஒரு தளத்தைப் பார்க்கலாம். ஃபயர்பாக்ஸ் சோதனை வசதிகளின் கீழ் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதைத் தனியே தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
தரவிறக்கம் செய்
Share |

ஃபேஸ்புக் டேட்டாவை பயன்படுத்தும் செயலிகளை தடுப்பது எப்படி?

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தகவலை பயன்படுத்தி பல மில்லியன் பயனாளிகள் மூன்றாவது தளத்தில் உள்நுழைய அனுமதிப்பது என்பது தெரிந்ததே. இந்த வகையில் பயனாளிகளின் பெர்சனம் தகவல்கள் மற்றும் பிரெளசிங் விபரங்கள் இதனால் டிராக் செய்யப்பட்டு அதன் மூலம் ஆன்லைன் புரபைல் செய்வது என்பதும், அதனை கம்ப்யூட்டர் அனுமதித்து ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் அனுமதிப்பது என்பதும் வழக்கமாகியுள்ளது. இந்த முறையில் தான் டேட்டாக்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் முறைகேடு செய்தது.

கம்ப்யூட்டரில் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவது எப்படி?

தகவல் பரிமாற்றத்தில் எஸ்எம்எஸ் எனப்படும் டெக்ஸ்ட் மெசேஜ்களை சில சமயங்களில் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கொண்டு வசதியாக அனுப்ப வேண்டும் என நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆன்ட்ராய்டில் இந்த ஆசையை தீர்த்துக் கொள்ள முடியும். இதற்கு ஆன்ட்ராய்டு மெசேஜஸ் ஆப் இருந்தால் மட்டும் போதுமானது.

கூகுள் லென்ஸை எப்படி பயன்படுத்துவது ?

கூகுள் நிறுவனம் தற்போது ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் என்று கூறப்படும் ஏஐ சியர்ச் நிறுவனங்களுக்கான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றது. அந்த வகையில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஒரு விஷுவல் சியர்ச் டூல் தான் கூகுள் லென்ஸ். நீங்கள் கூகுள் லென்ஸ் மூலம் ஒரு பொருளை பார்த்தால் அந்த பொருள் என்னவென்றே உங்களுக்கு தெரியாமல் இருந்தாலும் கூகுள் உடனே ஒரு பாப் அப் மூலம் அதன் சரித்திரத்தையே உங்கள் முன் காட்டும். தற்போது கூகுள் லென்ஸ் என்பது கூகுள் போட்டோஸ் செயலியில் பயன்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் சில பொருட்களிலும் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

வியாழன், 21 ஜூன், 2018

ட்ரம்பின் உத்தரவை வாசித்து கண்ணீர் விட்ட செய்தி வாசிப்பாளர்- வீடியோ

அகதிகளின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து தனிமையில் அடைத்து வைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவு குறித்த செய்தியை வாசித்தபோது, அந்த நாட்டு பெண் செய்தி வாசிப்பாளர் தேம்பி அழுத சம்பவம் உலகமெங்கும் பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புதன், 20 ஜூன், 2018

"சந்தனம் மிஞ்சினால்.... தடவுவார்கள்" என்ற பழமொழிக்கு, இவர் நல்ல ஒரு உதாரணம் (காணொளி)

சவுதி இளவரசர்  தன் பண்ணையில் வளரும் ஆடுகளுக்கு 100 / 100. கிராமில் தங்க செயின் அணிவித்து தன் சந்தோசத்தை வெளிபடுத்தி உள்ளார்.

11 குட்டிகளை ஈன்ற உலகின் மிக வயதான ஓராங்குட்டான்/ (orangutan) மரணம்

உலகின் மிகவும் வயதான சுமத்ரான் ஓராங்குட்டானாக (ஒரு வகை குரங்கினம்) கருதப்படும் 62 வயதான புவான், ஆஸ்திரேலியாவிலுள்ள மிருகக்காட்சி சாலையில் உயிரிழந்தது. இதற்கு 11 குட்டிகள் மூலம் 54 வழித்தோன்றல்கள் உலகம் முழுவதுமுள்ளது.

திங்கள், 18 ஜூன், 2018

பாகிஸ்தான்: மணமகளின் பெயர் திருமண அழைப்பிதழில் இடம்பெறாத விநோதம்

பாகிஸ்தானின் கைபர் பாக்துங்க்வா மாகாணம் சார்ஷ்தா மாவட்டத்தை சேர்ந்த ரெளஃப் கான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிவிட்டது.

ஞாயிறு, 17 ஜூன், 2018

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளின் அனுமதியை இயக்க

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் செயலிகளை பயன்படுத்துவோர் கடந்து வந்த பிரச்சனைகளில் இது முதன்மையானது எனலாம். ஸ்மார்ட்போனில் உள்ள செயலிகள் போனின் அம்சங்களை பயன்படுத்த அனுமதி கேட்பது பலருக்கு எரிச்சலாகவும், சிலருக்கு தொந்தரவாகவும் இருந்திருக்கும்.

ஃபேஸ்புக்கில் பாஸ்வேர்டு எப்படி மாற்றுவது

1 - ஸ்மார்ட்போனில் ஃபேஸ்புக் செயலியை திறக்கவும்

2 - இனி திரையின் மேல்புறம் வலதுபக்கம் காணப்படும் மெனு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

வெள்ளி, 15 ஜூன், 2018

படுத்த படுக்கையாக கிடக்கும் முன்னாள் ஜெயந்தன் படையணி போராளி! கண் திறப்பார்களா புலம்பெயர் தமிழர்கள்?

மட்டக்களப்பு கரவெட்டியாறு கிராமத்தில் ஜெயந்தன் படை போராளியான திலீபன் என்கிற வடிவேல் தில்லையம்பலம் 48 வயது என்பவரே இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ளார். இவரை ஒரு வயோதிப தாயாரே கவனித்து வருகின்றார். இவருடைய தகப்பனாரான வடிவேல் என்பவரும் நடக்க முடியாது உள்ளார்.

திங்கள், 11 ஜூன், 2018

ஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு - நடந்ததை பாருங்கள்

சந்தனம் மிஞ்சினால் எங்கெல்லாமோ தடவுவார்களாம். அது போல வெளிநாட்டில் வாழும் சில தமிழர்கள். பணத்தை தண்ணி போல இறைத்து, திருமணங்களையும் , புப்புனித நீராட்டு விழாக்களையும், ஏன் பிறந்த நாட்களையும் கொண்டாடி வருகிறார்கள். இவர்கள் ஒரு நிகழ்வுக்கு செலவு செய்யும் பணம், 100 குழந்தைகள் 1 வருடத்திற்கு நல்ல உணவு உண்ணக் கூடிய பணம். ஆனால் இவர்கள் அதனைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.

சிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய தமிழ்மக்கள்.. காரணமென்ன? (படங்கள்)

விஸ்வமடுவில் கதறி அழும் மக்கள்..!!

விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து, அம்பேபுஸ்ஸ முகாமிற்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் இராணுவ கேர்ணல் ரத்தனபிரிய பந்துவிற்கு அப்பகுதி மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இன்று தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவில்,

சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மற்றும் விஸ்வமடு மக்கள் ஆகியோர் கண்ணீருடன் கேர்ணல் ரத்தனபிரிய பந்துக்கு பிரியாவிடை கொடுத்துள்ளனர்.

பாதுகாப்பு படைகளில் வடக்கில் உள்ள மக்களை உண்மையில் நேசிக்கும் அதிகாரிகள் இருப்பதுடன், அவர்களை நேசிக்கும் மக்களும் இருக்கின்றனர்.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக தம்புள்ளையை சேர்ந்த நபரொருவர் எனக்கு இந்த புகைப்படங்களை அனுப்பியிருந்தார் என தெரிவித்துள்ளார்.

-----------------------------------------------------


நாதியற்ற நிலையில் இன்று…

போரின் வடுக்களோடு வக்கற்றநிலையில் கையேந்தும் திரிசங்கு நிலையில்ஈழத்தமிழினம் ..

தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் 2009 காலப்பகுதியில் போரின் உக்கிரத்தை அறிந்தும் கிளிநொச்சியில் இருந்து .. முள்ளிவாய்க்கால் ,நந்திக்கடல்என சாவின்விளிம்புவரைவந்த பொதுமக்களும் , உயிரைக் கொடுக்கத் துணிந்து நின்ற போராளிகளும் , கடைசி நேரத்திலும் இயக்கத்தில் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்ட போராளிகளும் ,குடும்பஸ்தர்களான துணைப்படையினரும் .. அங்கவீனர்களாகவும் போரின் கோரவடுவை உடலிலும் உள்ளத்திலும் தாங்கி தீண்டத்தகாத இனமாக இன்று பிச்சை எடுத்தேனும் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்க , மறுபுறம் கற்பு நெறியுடன்கூடிய பண்பாடுமிகு வீரத்தமிழிச்சிகள் விலைமாதர்களாகியேனும் தம் பிள்ளைகளுக்கு ஒருவேளை கஞ்சியாவது ஊற்றுவோம் எனும் துர்ப்பாக்கிய நிலையில் சிந்திக்க விட்டது யார் குற்றம் ?

நிர்க்கதியாக நட்டநடு வீதியில் நீங்கள் வாழ்ந்தால் என்ன? செத்தால் என்ன ?. யாருக்கு என்ன நஷ்டம் ? என்று எதையும் பொருட்படுத்தாது இறுமாப்பொடு கண்டுகொள்ளாது உலகம் முழுவதும் எண்ணுக்கணக்கற்ற இலட்சம் கோடி ரூபாய்களை கையகப்படுத்திக் கொண்ட விடுதலைப் பினாமிகள் தம் ஏழேழு பரம்பரைக்கு சேர்த்த சொத்தாகிப் போயுள்ளதை யாரறிவார்!

தாயக மக்களையும், விடுதலைப் போரின் மூலம் கிடைக்கும் சுதந்திரத்தையும் மூச்சாக சுத்தியோடு நேசித்த பல இலட்சம் புலத்து தமிழர்களின் உழைப்பையும் ,கண்ணீரையும் இரத்தத்தையும் சுரண்டிச் சேர்த்து ஏப்பம் விட்டவர் ஏதேனும் பதில் சொல்வார்களா ?

விடுதலைப் போராட்டத்தில் தேய்ந்த பாட்டா சிலிப்பரோடு (பாதணி) ஒரு லுங்கி, ஒருசீருடை செட், கையில் ஏ.கே.47 இவற்றோடு மட்டும் எந்த சொத்தும் இல்லாமல் களத்தில் சாகத்துணிந்து நின்ற போராளிகள் எனக்கூறும் சிலர் புலத்தில் இன்று தப்பி வந்து வாழும்போது, இவர்கள் கைகளுக்கு மிகச் சொற்ப்ப காலத்தில் இலட்சக் கணக்கில் ஈரோக்களாகவும், சுவிஸ் பிராங்குகளாகவும், பவுண்ஸ்களாகவும், டாலர்களாகவும் கைக்கு வந்து பண முதலைகளாக ஊதிப் பெருத்து எங்கு முதலிடலாம் என தமிழர்களிடமே வாய்விட்டுக் கேட்கும் நிலையுண்டென்று யாரறிவார் ?

புலத்தில் 30 ஆண்டுகளாக வசிக்கும் ,சாதாரணமாக நேர்மையாக உழைக்கும், பாசை ஓரளவு பேசக்கூடிய ஓர்சராசரித் தமிழன் நாளொன்றிற்கு மூன்று வேலை செய்தும் குடும்ப பொருளாதாரச் சுமையை தாங்காது பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் சமகால யதார்த்த நிலையிருக்க தம்மைப் புலம்பெயர் தாயக விடுதலைப் பணியாளர்களாக ,தியாக மனப்பாங்குடன் குடும்ப இன்ப துன்பங்களைக்கூட மறந்து மக்கள் பணிக்காக எம்மை இணைத்தோம் எனுப் பீத்திக்கொள்ளும் செயற்பாட்டாளர்கள்

அதிலும் வெளிநாட்டுத் தமிழ் மக்களிடம் சேர்த்த பணத்தில் மாதாந்த அடிப்படைப் சம்பளமாக குறைந்த ஊதியம் பெற்றவர்களின் கைகளில் இன்று சொத்தாக பல அடுக்குமாடி வீடுகளும், உணவு விடுதிகளும், எரிபொருள் நிரப்பு நிலையங்களும், இன்னும்பல பெரும் முதலீட்டுத் தொழில் நிறுவனங்களும் இவர்தம் கையில் வந்தது எப்படி ..?

இன்றேனும் இதைப்பற்றிக் கேள்விகேட்க யாருக்கும் நாதியுண்டா..? இல்லை எவருக்கும் திராணியுண்டா ..?

இல்லாத பட்சத்தில் ,இதுபோல் பல காட்சிகள் அரங்கேறியே தீரும்..!

சுவிஸிலிருந்து .. சுமா(Suma)
-----------------------------------------------------------

ஓர் பயனாளியின் முகநூலில் இருந்து..


சிவில் பாதுகாப்பு திணைக்கள இணைந்த கட்டளை அதிகாரி W.W Rathnapriya Bandu அவர்களை #தமிழ் மக்கள்# கண்ணீரோடு வழியனுப்ப காரணம் என்ன??….

#போரால் மிகவும் பாதிக்கப்பட்டு அன்றாட உணவிற்கே வளியற்று இருந்த 3500 வடமாகாண மக்களிற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினூடாக அரச வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்தார்.

இதன் மூலம் இன்றுவரை வடமாகாணத்துக்குள் மாதாந்தம் அண்ணளவாக 112 000 000/= ரூபாய்கள் புரள்கின்றன.

#போரால் பாதிக்கப்பட்டு குருடாகி, செவிடாகி, கையிளந்து, காலிளந்து, உடல் முழுதும் சன்னங்கள் நிறைந்து வலுவிழந்து வாழ்வில் நம்பிக்கையிழந்து நின்றோர்கும் வேலை கொடுத்த மகான் இவர்.

#வலயக்கல்வி பணிமனையின்கீழ் மாதாந்தம் 3000/= வேதனம் பெற்றுவந்த முன்பள்ளி ஆசிரியர்களை உள்ளீர்து 30,000/= மேல் வேதனம் பெற வைத்தார். அத்துடன் முன்பள்ளிகளின் கல்வி, கட்டடம், தளபாடம் என்பனவற்றின் தரங்களையும் உயர்த்தினார்.

# கல்வி நிலையங்கள் ஆரம்பித்து தரம் 1 முதல் 11 வரை பலநூறூ மாணவர்கள் கற்க வழிசமைத்தார்.

#பணியாளர்களை அவரவர் இயலுமைக்கேற்ப விவாயம், கைப்பணி, தையல், ஒட்டுதல், மேசன் வேலை, தச்சு வேலை போன்ற மேலும்பல துறைகளில் நெறிப்படுத்தினார்.

#இராணுவத்திடம் இருந்து பலநூறு ஏக்கர் காணிகளை திணைக்களத்திற்கு பெற்று தந்து; நாம் விவசாயம் செய்ய வழிசெய்தார்.

# போரால் பாதிக்கப்பட்டு காணப்பட்ட பாடசாலைகள்,கோவில்கள்,பல பொது இடங்களை துப்பரவு செய்து தந்தார்.

#கோவிலே கட்டுவித்து விக்கிரகங்கள் பல செய்து கும்பாவிசேகமே செய்வித்தார்.

#எம் பகுதியில் குளம்கூட கட்டுவிக்க துணை நின்றார்.

#திணைக்களத்தினுள்ளே நடன அணி, நாடக அணி, கராத்தே அணி, இசை அணி என உருவாக்கி சாதனைகள் பல நாம் பெற வழிசெய்தார்.

#திறனுள்ளவர்கள் பலநூறு பேரை உயர்கல்விக்குத் தானனுப்பி பல துறைகளில் Diploma, Degree பெற செய்து அழகு பார்த்தார்.

# வடபகுதி பணியாளர்கள் தென்பகுதி செல்லாமல் வடபகுதியிலே திணைக்கள பயிற்சியினை முடிப்பதற்கு வழிசமைத்தார்.

# திணைக்களத்திற்கு அப்பால், பல பொதுமக்கள், பிரமுகர்கள் போன்றோருடன் நல்ல உறவுகளை கொண்டிருந்தார்.

# வேலை வாய்ப்புகளை வழங்கியது மட்டுமல்லாது, பணியாளர்களை படிப்படியாகி தரமுயர்த்தி சமூகத்தில் நல்ல அந்தஸ்தையும் பொற்றுக் கொடுத்தார்.

# ஆரம்பத்தில் ஒரு தமிழர் தன்னும் CSD இல் இணைய முன்வராத சந்தர்பத்திலும்; தான் துவண்டு விடாது கடினப்பட்டு ஆரம்பத்தில் 20 பணியாளர்களை இணைத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று தன் தலையை அடகுவைத்து, மக்களின் மனதில் நம்பிக்கை ஊட்டி 3500 க்கும் மேற்பட்டவர்களை இணைத்துக் கொண்டார், இவரின் சேவைகள் ஒன்றா இரண்டா சொல்லிட முடியவில்லை……

# அரசியல் நெருக்கடிகள்,நிர்வாக சிக்கல்கள் என எண்ணிலடங்கா பிரச்சனைகளிற்கு முகம்கொடுத்து எம்மையெல்லாம் அன்புடன் ஆதரித்த அதிகாரி இடமாற்றம் பெற்று மீண்டும் இராணுவத்திற்கு செல்கிறார்.

# பணியாளர்கள் ஒவ்வெருவரையும் தனித்தனியே நிலையறிந்து; உதவிகள் பல செய்து தாயாய், தந்தையாய், அண்ணனாய், நண்பனாய் எம் மனங்களில் உயர்ந்திட்டார்.

நாம் தமிழராய் எதிரியாய் 30 வருடங்களுக்கு மேலாக இருந்தும், எவ்வித வேற்றுமையும் இன்றி எம்மை “அன்போடு அரவனைத்த உள்ளம்” பிரியும் வேளை எவ்வாறு கண்ணீர் சிந்தாமல் இருப்பது??..







Share |

சனி, 9 ஜூன், 2018

போட்டோவை வீடியோவாக மாற்ற

புகைப்படங்களை வீடியோக்களாக மாற்ற பல்வேறு வீடியோ எடிட்டர்கள் கிடைக்கின்றன. எனினும் ஷாட்கட் (Shotcut) சேவையை பயன்படுத்தி எவ்வாறு புகைப்படங்களை வீடியோக்களாக மாற்ற வேண்டும் என்பதை இங்கு தொகுத்திருக்கிறோம். விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் போன்ற இயங்குதளங்களில் கிடைக்கும் ஷாட்கட் மென்பொருள் மிகவும் எளிமையான அம்சங்களை கொண்டிருக்கிறது.

புதன், 6 ஜூன், 2018

இந்த தளங்களில் இருந்து இலவசமாக தமிழ் திரைப்படங்களை பார்க்கலாம்

ஆன்லைனில் நீங்கள் இலவசமாக பல்வேறு தமிழ் திரைப்படங்களை பார்க்க முடியும், அதற்கு தகுந்த பல்வேறு வலைதளங்கள் மற்றும் செயலிகள் வந்துவிட்டது. குறிப்பாக இந்த திரைப்படங்களை பார்க்க அதிக டேட்டா செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 4 தளங்களில் இருந்து இலவசமாக தமிழ் திரைப்படங்களை பார்க்கலாம்.!

திங்கள், 4 ஜூன், 2018

பசுவுக்கு மரண தண்டனை விதிப்பு


ஐரோப்பிய எல்லைத் தாண்டிச் சென்று விதிமுறை மீறியதால், கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

``ஹலோ யாரு? நான் கூகுள் பேசுறேன்!" - கலக்க வரும் கூகுளின் புதிய வசதிகள்

உலகம் முழுவதும் இருக்கும் பலதரப்பட்ட மனிதர்களின் டேட்டாவை கையில் வைத்திருக்கும் கூகுளுக்கு எதிர்காலத்தில் அவர்களுக்கு எது தேவைப்படும் என்பதைக் கணிப்பது மிகச் சுலபமான வேலைதான். தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் AI தான் இனிமேல் எதிர்காலம் என்று முடிவெடுத்துவிட்டது கூகுள். அதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கிறது கூகுளின் இந்த வருட I/O டெவெலப்பர் மாநாடு. இதில் கூகுள் அறிமுகப்படுத்திய புதிய வசதிகள் பெரும்பாலானவை செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டதுதான்.

கூகுள் ஹோம் அசிஸ்டெண்ட் கூறும் 7000 கோடி தக­வல்கள்

சொல்லும் வேலை­களை எல்லாம் தட்­டாமல் செய்யும் கூகுள் ஹோம் இப்­போது இந்­தி­யா­வுக்கும் வந்­து­விட்­டது. அது என்ன கூகுள் ஹோம்? அது எப்­படி செயல்­படும்?

கூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவது எப்படி?

கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட புதிய குரல்களை ஆன்ட்ராய்டு சாதனங்களில் பெறுவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

ரஜினி ஸ்டைல்: 67 சுவாரஸ்ய தகவல்கள்

1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950 ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த முதல் இந்திய நடிகர் ஆவார்.

சனி, 2 ஜூன், 2018

எக்ஸ் வீடியோஸ் - படவிமர்சனம்

ஆபாச இணையதளங்களின் வெறிக்கு சாமானிய மக்கள் எப்படி இரையாக்கப்படுகிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக உணர்த்தும் படம் 'எக்ஸ் வீடியோஸ்'.

பெண் 'சுல்தான்': மரபுகளை மாற்றும் ஓர் இஸ்லாமிய அரச குடும்பம்

 சுல்தானின் மூத்த மகள் தற்போதைய விவாதத்தின் மையமாக உள்ளார்.

இந்தோனீசிய தீவான ஜாவாவில் அரசியல் மற்றும் ஆன்மீக அதிகாரங்களில் மிகவும் சக்திவாய்ந்த நிலையில் இருப்பவர் யோக்யகர்தாவின் சுல்தான்.

சீரியல் ‘சொர்ணாக்கா’ கைது!

வெளிநாட்டுப் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததாக பிரபல சீரியல் நடிகை சங்கீதா பாலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெள்ளி, 1 ஜூன், 2018

சௌதி இளவரசி படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய சஞ்சிகை

 அட்டைப்படத்தில் இளவரசி - சர்ச்சையில் சஞ்சிகை

சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹைஃபா பிண்ட் அப்துல்லா அல் சௌத் ஒரு காரில் அமர்ந்திருப்பதுபோல தங்கள் அட்டைப்படத்தில் வெளியிட்டது அரபு உலகில் உள்ள பெண்களின் பிரச்சனையை வெளிப்படுத்தவே என்று 'வோக் அரேபியா' சஞ்சிகை கூறியுள்ளது.

ஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத எண்களை ப்ளாக் செய்வது எப்படி?

பயனர்கள் தங்களுக்கு தேவையில்லா எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எளிதில் தடை செய்யமுடியும். ஐ ஓ.எஸ் அல்லது ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளை பயன்படுத்தியோ அல்லது உங்கள் தொலைதொடர்பு நிறுவனத்தின் உதவியுடனோ அல்லது நேசனல் டு நாட் கால் ரிஜிஸ்டரி மூலமோ இதை செய்யலாம். எப்படி இலவசமாகவும் எளிதாகவும் தேவையில்லா எண்களை நீங்களே தடை செய்யும் வழிமுறையை இங்கே காணலாம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல