திங்கள், 10 டிசம்பர், 2018

39 மனைவிகளுடன் வாழும் விசித்திரமான மனிதர்

* வட கிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த 73 வயதான Ziona Chana, தமது 39 மனைவிகளுடன், ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். 'Baktawng' கிராமத்தைச் சேர்ந்த இவர், கிறிஸ்தவ மதத்தில், பலதார மணத்தை ஆதரிக்கும், 'சனா பால்' (Chana Pawl) என்ற ஒரு பிரிவின் தலைவராக உள்ளார்.



* கடந்த 1945ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி இவர் பிறந்தார். 1959ம் ஆண்டு, தமது 15 வயதில், முதல் திருமணம் செய்தவர், 2004 ல் தமது 60வது வயதுடன் மணம் முடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

* மொத்தம் 94 குழந்தைகள், 14 மருமகள்கள், 33 பேரக் குழந்தைகள் என, இவரது வீட்டின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, 181. இந்த பெரிய குடும்பத்தை பராமரிப்பதற்காக, தமது சொந்த கிராமத்தில், 100 அறைகள் கொண்ட மாளிகை ஒன்றை, கட்டியுள்ளார்.

* 181 பேரை கொண்ட சியோனாவின் மிகப்பெரிய குடும்பத்திற்கு தினசரி, உணவு தயாரிப்பதே, திருமண மண்டபம் போல, களை கட்டுகிறது.

* குடும்ப உறுப்பினர் காலை மற்றும் மாலையில், 30 கிலோ அரிசியை, நாங்கள் பயன்படுத்துகிறோம். நாங்கள் பயன்படுத்தும் அனைத்து சமையல் பொருட்களும், உபகரணங்களும் எங்களாலேயே தயாரிக்கப்படுகின்றன.

* தேவையான உணவுகளை தாங்களாகவே விளைவித்து கொள்ளும் ஜியோனா குடும்பத்தினர், தனியாக பள்ளி ஒன்றையும் நடத்தி வருகின்றனர். பெண்கள் வீட்டு வேலைகளிலும், ஆண்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு, குடிசை தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

* உலகின் மிகப்பெரிய குடும்பத்துக்கு சொந்தக்காரரான சியோனாவை பற்றி கேள்விபட்டு, பலரும் இங்கு குவிவதால், அவரது வீடு, ஒரு சுற்றுலா தளமாகவே மாறிவிட்டது.

* தாம் கடவுளின் சிறப்புக் குழந்தை. அதனால் தான், தம்மை கவனித்துக் கொள்வதற்காக, ஏராளமான சொந்தங்களை கடவுள் தமக்கு கொடுத்துள்ளார் என்று இவர் பெருமை பேசுகிறார். தாம், 39 மனைவிகளின் கணவன் என்பதை நினைத்துப் பெருமைப்படுவதாகவும், இந்த வகையில் அதிர்ஷ்டக்காரன் என்றும், அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்




Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல