ஞாயிறு, 7 ஜூன், 2020

அமெரிக்காவில் தேவையில்லாத சிக்கலில் மாட்டிய பிரியங்கா சோப்ரா

தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் வலம் வந்த பிரியங்கா சோப்ரா, சில வருடங்களாக ஹாலிவுட்டில் கால் தடம் பதித்து. மிகவும் பிரபல்யமாகி வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த கறுப்பின படுகொலைக்கு எதிராக தான் குரல்கொடுக்க வேண்டும் என்று நினைத்து. தேவையில்லாத சர்சையில் தற்போது சிக்கிக்கொண்டுள்ளார்.

கறுப்பர்கள் வாழவேண்டும் என்ற ஒரே கோஷத்தின் கீழ் தான், அமெரிக்காவிலும் சரி உலக நாடுகளிலும் சரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் தான் பிரியங்கா சோப்ரா, ஒரு பெரும் விளம்பரத்தில் நடித்திருந்தார்.

அதில் "ஒரு உங்கள் தோலை மேலும் வெள்ளையாக்க வேண்டுமா இதனை பாவியுங்கள் என்று ‘Light Ultra fairness and dark spots reduction cream’ மை இவர் கூறியுள்ளார்.

குறித்த கிறீமை பாவித்தால் கறுப்பான இடங்கள் வெள்ளையாக மாறும் என்று அந்த கம்பெனி விளம்பரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தனது ரிவிட்டர் மற்றும் இன்ஸ்டகிராமில் அவர் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக செய்திபோட. உடனே அமெரிக்க மக்கள் அவர் நடித்த விளம்பரத்தை போட்டு அவரை வறுத்து எடுத்துவிட்டார்கள்.

ஏனடா இந்த ரிவீட்டை போட்டோம் என்ற அளவுக்கு நிலமை மோசமாகி விட்டது. மக்கள் கிழி கிழி என்று கிழித்துவிட்டார்கள் இவரை.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல