வெள்ளி, 25 ஜூன், 2021

ஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்ய


கூகுள் நிறுவனம் அண்மையில் ஜிமெயில் சேவையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்தது.
அதாவது செக்கர் பிளஸ்(Checker Plus for Gmail),
சிம்பிள் ஜிமெயில் நோட்ஸ் (Simple Gmail Notes),
கிராமர்லி (Grammerly),
சேன்பாக்ஸ் வசதி (Sanebox),
பிரிஸ்கின் (Briskine),
மெயில்டிராக் (MailTrack),
டிக்டேசன் ஃபார் ஜிமெயில் ( Dictation for Gmail) உள்ளிட்ட அம்சங்களை தான் அறிமுகம் செய்தது.
 
இந்த அம்சங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது குறிப்பாக மெயில்டிராக் எனும் அம்சம் நாம் எதிர்பார்க்கும் வகையில் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மெயில்டிராக் (MailTrack)

அதன்படிஇந்த மெயில்டிராக்கை நீங்கள்இன்ஸ்டால் செய்தால் உங்களது மெயில் சென்றடைந்தது என்பதை அறிய ஒரு செக் மார்க்கும்,அது திறந்து பார்க்கப்பட்டதா என்பதைஅறிந்துகொள்ள இரண்டு செக்மார்க்கும் இருக்கும். இந்த வசதியின் மூலம் உங்களது மெயில் திறந்த பார்க்கப்பட்டதா என்பதை உறுதிபடுத்தமுடியும்.

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் அனுப்பும்மெயில் சென்ட் வித்மெயில்டிராக் என்றஅடையாளத்துடன் செல்லும். ஒருவேளை 5 அமெரிக்க டாலர் கொடுத்து புரோ வெர்ஷனை இன்ஸ்டால் செய்தால் அந்த அடையாளம் இன்றிசெல்லும் என்றுகூறப்படுகிறது. கிட்டத்தட்ட லாபம் வரும் நோக்கத்தில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் ஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை block செய்யவும் வழி உள்ளது. அதற்கான வழிமுறைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

முதலில் உங்களது ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் மாடலில் உள்ள ஜிமெயில் பயன்பாட்டை திறக்கவும்

அடுத்து ஜிமெயில் உள்ள இன்பாக்ஸ்-இல் message-ஐ திறக்கவும்.

நீங்கள் மெசேஜ் கிளிக் செய்தவுடன் மேல் வலதுபுறத்தில் More எனும் விருப்பத்தைக் கிளக் செய்யவும்.

அதன்பின்னர் Block [Sender] எனும் விருப்பம் இருக்கும், இதை கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை நிறுத்த முடியும்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல