வெள்ளி, 25 ஜூன், 2021

டெலிகிராம் செயலியில் உங்களது போன் நம்பரை எப்படி மறைப்பது ?


வாட்ஸ்அப் போலவே டெலிகிராம் செயலியும் பல்வேறு முக்கியமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டெலிகிராம் செயலியில் சில பாதுகாப்பு அம்சங்கள் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும். 
 
அதாவதுஇந்த டெலிகிராம் செயலி மூலம் நீங்கள் செய்தி அனுப்பும் நபர்களிடமிருந்தோ அல்லது உங்களின் பொதுவான குழுக்களில் இருப்பவர்களிடமிருந்தோ தனிப்பட்ட விவரங்களை மறைக்க முடியும்.

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் உங்களது டெலிகிராம் செயலியில் போன் நம்பரை மறைக்க முடியும். இந்த வசதி நமக்கு பல்வேறு வகையில் பாதுகாப்பாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

டெலிகிராம் செயிலியில் உங்களது போன் நம்பரை மறைக்க

முதலில் உங்களது டெலிகிராம் செயலியில் settings பகுதிக்கு செல்லவும்.

அடுத்து settings பகுதியில் இருக்கும் Privacy and Security என்பதை தேர்வுசெய்யவும்.

Privacy and Security தேர்வுசெய்தவுடன், போன் நம்பர் (phone number) என்பதை கிளிக் செய்யவும்.

போன்நம்பரை கிளிக் செய்தவுடன் மூன்று விருப்பங்கள் காணப்படும்.
everybody, my contacts, nobody என்ற மூன்று விருப்பம் இருக்கும்,

அதில் nobody என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

இதன் மூலம்டெலிகிராம் செயலியில் உங்களது போன் நம்பரை மறைக்க முடியும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல