சனி, 7 பிப்ரவரி, 2026

ஒபாமாக்களை குரங்குகளாக சித்தரிக்கும் இனவெறி காட்சி கொண்ட வீடியோ பகுதியை ‘நான் பார்க்கவில்லை’ – டிரம்ப்

 

அமெரிக்க டொனால்ட் டிரம்ப், சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் பராக் ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமாவை குரங்குகளாக சித்தரிக்கும் இனவெறி காட்சி இடம்பெற்றிருந்த பகுதியை “நான் பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

‘தி லயன் ஸ்லீப்ஸ் டுநைட்’ பாடலுக்கு அமைக்கப்பட்ட அந்த காட்சி, 2020 அதிபர் தேர்தலில் வாக்குச்சீட்டு மோசடி குறித்த குற்றச்சாட்டுகளை கொண்ட 62 விநாடி நீளமான வீடியோவின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றிருந்தது. பின்னர் அந்த வீடியோ நீக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மன்னிப்பு கேட்கப்போகிறாரா என்ற கேள்விக்கு, “நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று பதிலளித்தார்.

வீடியோ பதிவேற்றப்படும் முன் அதன் தொடக்கப் பகுதியை மட்டுமே பார்த்ததாகவும், ஒபாமாக்களை இவ்வாறு சித்தரிக்கும் காட்சி அதில் இருப்பது  தெரியாது என்றும், தன்னுடைய பணியாளர் ஒருவரால் அது பதிவேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கருப்பினத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர் டிம் ஸ்காட், “இந்த வெள்ளை மாளிகையிலிருந்து நான் பார்த்த மிக மோசமான இனவெறி செயல் இதுதான்” என்று கடுமையாக விமர்சித்தார்.

ஆரம்பத்தில், வெள்ளை மாளிகை அந்த வீடியோவை “இணைய மீம் வீடியோ” எனக் கூறி பாதுகாத்ததுடன், விமர்சகர்களை “போலி கோபத்தை நிறுத்துங்கள்” என்றும் தெரிவித்தது.

ஆனால் பல குடியரசுக் கட்சி செனட்டர்கள் உட்பட பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, டிரம்பின் ‘ட்ரூத் சோஷியல்’ கணக்கிலிருந்து அந்த பதிவு நீக்கப்பட்டது. மேலும், ஒரு பணியாளர் “தவறுதலாக” அந்த பதிவைச் செய்ததாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருப்பின மக்களை குரங்குகளுடன் ஒப்பிடும் இனவெறி கார்ட்டூன் நினைவூட்டும் அந்த காட்சி, கடந்த அக்டோபரில் ‘சீரியாஸ்’ என்ற பாதுகாப்பு மனப்பான்மை கொண்ட மீம் உருவாக்குபவர் X தளத்தில் பகிர்ந்த பதிவிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

அந்த வீடியோவில், நியூயார்க் பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ், நியூயார்க் நகர மேயர் ஸோஹ்ரான் மம்தானி, முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட பல முக்கிய டெமோக்ராட் தலைவர்கள் விலங்குகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், டிரம்புக்கு முன் அதிபராக இருந்த ஜோ பைடனும் வாழைப்பழம் சாப்பிடும் குரங்காக காட்டப்பட்டுள்ளார்.

இந்த வீடியோ குறித்து ஒபாமா தம்பதியினர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல