திங்கள், 1 பிப்ரவரி, 2010

தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி ... தப்புவர்ஹு எப்படி?

தலைவலியால் பாதிக்கப்படாதவர்கள் எவரும் இருக்க முடியாது.கோபம், டென்ஷன், ஏமாற்றம் போன்ற உளவியல் காரணங்களாலும், அஜீரணம், மலச்சிக்கல், நரம்புக் கோளாறு, ஈரல் பாதிப்பு போன்ற உடலியல் காரணங்களாலும் தலைவலி உருவாகும்.

இந்தத் தலைவலிக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மருத்துவ முறையை மேற்கொள்வார்கள். சிலர் வீட்டு வைத்திய றையில் சிகிச்
 சை செய்து கொள்வார்கள்.


சிலர் வலி நிவாரணத் தைலங்கள், அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் கிடைக்கும் மாத்தி ரைகளை பயன்படுத்துவார்கள். சிலர் சூடாக கோப்பி, தேநீர் அருந்துவார்கள். இதன் மூலம் நிரந்தரத்தீர்வு என்றுமே கிடைக்காது. தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும்.

இந்தத் தலைவலி பலவிதங்களில் வேதனைப் படுத்தும்.

* தலை முழுவதும் வலி தோன்றுதல்.

* நெற்றியின் இரு பக்கங்களிலும் வலி தோன்றுதல்.

* நெற்றியின் ஒரு பக்கத்தில் வலி.

* உச்சந்தலையில் வலி.

* தலையின் பின்பக்கத்தில் வலி.

*கழுத்து பிடரிப் பகுதியில் வலி என பலவகையுண்டு.

இவற்றில் மைக்ரேன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒற்றைத் தலைவலியால் அவதிப் படுவோர் அதிகம்.

ஒற்றைத் தலைவலி உருவாக காரணங்கள்

இது அவ்வப்போது தோன்றக்கூடியது.
கண்களின் மேல்புறம், தலையின் பின்புறம், தலையின் ஒரு பக்கம் என வலி தோன்றும்.

பொதுவாக கோபம், மன இறுக்கம், மன உளைச்சல், சுற்றுச்சூழலின் அழுத்தம், பரபரப்பு, படபடப்பு, தோல்வி, இயலாமை, அவமானம் போன்ற மனம் சம்பந்தப்பட்ட காரணங்களாலேயே ஒற்றைத் தலைவலி உண்டாகிறது.

மது, புகைப்பழக்கம், மசாலாப் பொருட்கள், ஊறுகாய், மற்றும் எண்ணெயில் பொரிக்கப் பட்ட உணவுகளை சாப்பிடுவதாலும் ஒற்றைத் தலைவலி வருகிறது.

நரம்புகள் பாதிக்கப்படும்போதும், குடலில் புண் ஏற்படும்போதும் ஒற்றைத் தலைவலி உருவாகும்.

ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகரித்து அவை மேல் நோக்கி நீராகக் கோர்த்து தலைவலியை உண்டாக்குகின்றன.

ஒற்றைத் தலைவலி பொதுவாக ஆண்களை விட பெண்களையே அதிகம் தாக்குகின்றது.மாத விலக்குக் காலங்களிலும், பிரசவமான பெண்களுக்கும் இது அதிக பாதிப்பை ஏற் படுத்துகிறது. இதற்குக் காரணம் ஹோர்மோன்களில ஏற்படும் மாற்றமேயாகும்.

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள், கருப்பை அகற்றப்பட்ட பெண்கள், கருத்தடை சாதனங்கள் உபயோகிக்கும் பெண்கள் இந்த ஒற்றைத் தலைவலியால் அதிகம் பாதிப்படைகின்றனர்.

முன் அறிகுறிகளோடு வரும் தலைவலி

ஆங்கிலத்தில இதற்கு கிளாசிக்கல் மைக்ரேன் என்று பெயர். இந்த தலைவலி தாக்கும் முன் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, மனச் சோர்வு இதில் ஏதாவது ஒன்று வந்தால் கூட தலைவலி ஆரம்பித்துவிடும். மேலும் சிலருக்கு பார்வை மங்கல், கண்ன் மின்மினி பூச்சிகள் பறப்பது போலவும், கறுப்புப் புள்ளிகள் சுழல்வதுபோலவும் தோன்றும். பின் தலை வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகக்கும்.

நிரந்தர வலி

இந்த வகையான தலைவலி இளம் வயது மற்றும் நடுத்தர வயது ஆண்களுக்கு (20 தல் 45 வயதிற்குள்) ஏற்படக்கூடியதாகும்.
இந்த தலைவலி வந்தவுடன், தலை வலிக்கும் பக்கத்தில் கண்கள் சிவக்கும். மூக்கிலிருந்து நீர் ஒழுகும். அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இந்தத் வலி தினம் ஓருறை தாக்கும்.

எந்த வகையான உள் மருந்து, வெளிமருந்து ஆகியவைகளை பயன்படுத்தினாலும் தலை வலி குணமாகாது. தானாக உண்டாகும், பிறகு தானாக குணமாகும். இந்தத் தலைவலியால் அவதிப்படுப வர்கள் முதலில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

ஒற்றைத் தலைவலியை நோய் வருவதற் கான அழைப்பு மணி என்றே சித்தர்கள் கூறகின்றனர்.

ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க

ஒற்றைத் தலைவலி தோன்ற தற்காரணம் மனப் பாதிப்புகளே.

"கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு அமருவான் என்பது பழமொழி.' எனவே டென்ஷன், கோபம், மன உளைச்சல், மன இறுக்கம் போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தினமும் காலை, மாலை இரு வேளையும் ஏதாவது ஒரு நேரத்தில் யோகா, தியானம் செய்வது நல்லது.

இளம் சூடான நீரை அருந்த வேண்டும்.

வலி நிவாரணிகளை அதிகம் உபயோகிக்கக் கூடாது. அவைகள் பல பின்விளைவுகளை உண்டாக்குகின்றன.

அதுபோல் வெளிப்பூச்சு மருந்துகள் சில சமயங்களில் ஒவ்வாமையை உண்டாக்கி விடும். எனவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

குளிரூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரண மாகக்கூடிய மென்மையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அதிக சப்தம் காதுகளைப் பாதிக்கும். காதுகள் பாதிகப்பட்டால் தலைவலி உண்டாகும்.
எனவே அதிக சப்தமுள்ள இடங்களில் இருப் பதைத் தவிர்ப்பது நல்லது.

உடல்த் தன்மைக்கேற்ப உணவு றையை மாற்றி அமைத்துக்கொண்டால் தலைவலியிலிருந்து தப்பலாம்.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல