திங்கள், 1 பிப்ரவரி, 2010

முதிர் கன்னி

நாற்பது வயதில்
நானூறு கணவர்கள்
கற்பனையில்

பெண் பார்ப்பதாய் வந்து
இனிப்பை விழுங்கி
என்னை துப்பிவிட்டு
போனது பல கூட்டம்

ஒருத்தன்
அழகில்லை என்றான்
ஒருத்தன்
குணமில்லை என்றான்
படிக்கவில்லை
என்றார்கள்
பிடிக்கவில்லை
என்றார்கள்
மொத்ததில்
எல்லோருக்கும்
அப்பாவின்
வங்கிக் கணக்கில்
ஒன்றுமில்லை என்பது மட்டும்
உறுதியாய் தெந்திருந்தது

எனக்கும்
16 வயதில்
காதல் வந்தது
பருவக்கோளாறு என்றார்கள்
25 வயதில் காதல் வந்தது
இப்போ என்ன அவசரம் என்றார்கள்
இப்போதும் காதல் இருக்கிறது
நரை விழுந்த பின்
இது நடக்காத விடயம்
என்கிறார்கள்

கற்பில் சிறந்தவள்
கண்ணகியா? மாதவியா?
ஒரு பக்கம் விவாதிக்க
எனக்குள்ளும்
ஒரு போராட்டம்
கனவில் குடும்பம் நடத்துவது
ஒழுக்கக்கேடா?
உணர்ச்சிக் கொந்தளிப்பா?

என்
கண்ணீர் துளிகளைத்
தாங்கப் போய்
என் வீட்டு
யன்னல் கம்பிகள் கூட
துருப்பிடித்து விட்டது
என்
தலைக்கு அணையாக
நின்று
சுவர்கள் கூட
கறை பெயர்ந்து
போய் விட்டது

என் சோகம்
அவைகளுக்குப்
புரிகிறது
என்
சுற்றத்தாருக்குத் தான்
புரியவில்லை
என்னைக் கண்டதும்
முணுணுக்கிறார்கள்
"வயசான காலத்தில்
மினுக்கிக் கொண்டு
போறா பார்'

வித்யா காந்தன் கட்டுமானை.



Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல