திங்கள், 1 பிப்ரவரி, 2010

கர்ப்பப்பை கட்டிகள்

இன்று உலகளாவிய ரீதியில் கர்ப்பப்பை கட்டிகளால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. பெரும்பாலான பெண்கள் தன் உடலினுள் ஏற்படும் இந்த கட்டிகள் தொடர்பில் போதிய அறிவின்மையால் பெரும் சிரமங்களையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்குகின்றனர். இது கேன்சர் கட்டிதான் என்று தாங்களே முடிவு செய்து பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியும் வருகின்றனர். இப்படி கர்ப்பப்பையினுள் ஏற்படும் கட்டிகள் எல்லாமே கேன்சர் கட்டிகள் அல்ல இது குறித்து மகப்பேற்று நிபுணர்கள் கூறும் கருத்துக்கள் இவை.


கர்ப்பப்பை கட்டிகள் என்றால் என்ன?

கருப்பையிலுள்ள இணைப்பு டிசுக்களிலும், தசைப்பகுதிகளிலும் உருவாகும் கட்டிகள் தான் கர்ப்பப்பை கட்டிகள் இது நாம் அச்சப்படும் வகையிலான கேன்சர் கட்டிகள் அல்ல. கர்ப்பப் பையின் சுவலோ அல்லது கர்ப்பப்பை சுவல் ஒட்டிக்கொண்டோ மெதுவாக வளரும் கட்டிகள் இவை. லியோமயோமா அல்லது மயோமா என்று இவை அழைக்கப்படும்.

கருப்பை கட்டிகள் வேர்க்கடலை அளவுக்கு சிறியதாகவோ, தேங்காய் அளவுக்கு பெயதாகவோ பல சைஸ்களில் வளரும். இப்படி வளரும்போது கர்ப்பப்பையின் உருவத்தை கூட இவை மாற்றி விடும். கர்ப்பைக்கட்டிகளில் பெரும்பாலானவை கேன்சர் கட்டிகள் அல்ல.

இவை ரொம்பவும் அரிதாகத்தான் கேன்சர் கட்டியாக மாறும் உலகளவில் இந்த கட்டிகள், பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விடயத்தில் இன்று ஒரு பெய பிரச்சினையாகவே மாறி வருகிறது. இக்கட்டிகள் தொடர்பாக அந்த அளவுக்கு பயப்படவேண்டிய விஷயம் இல்லை என்றாலும் கூட, இந்த கட்டிகள் இன்று, ஆயிரக்கணக்கான கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்கான (Hy sterectomy)) காரணமாகி விடுவதால், இது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பெய விஷயமாகிவிட்டது.

ஒரு வேதனை என்னவென்றால், இந்த கட்டிகள், கேன்சர் கட்டியாக இல்லாமல் இருந்தாலும்கூட, இன்று மகப்பேறு அறுவை சிகிச்சைகளில் கணக்கில்லாத அறுவை சிகிச்சைகளுக்குக் காரணமாகிவிட்டன.

கட்டிகள் உருவாக காரணங்கள் என்னென்ன?

கர்ப்பப்பையில் கட்டிகள் உருவாவதற்கான காரணங்கள் பற்றி இதுவரை அறியப்பட வில்லை. இந்த கட்டிகள், அது இருப்பதற்கான எந்த அறிகுறியையும் வெளிக்காட்டாமலேயே, கர்ப்பப்பைக்குள் உருவாகி பல ஆண்டுகள் நிதானமாக வளரும் தன்மை கொண்டவை.

சில குடும்பங்களில் பரம்பரை காரணமாக இந்த கட்டிகள் உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்தக் கர்ப்பப்பைக்கட்டிகள் 20 வயதுக்கு முன்னால் வருவதற்கு வாய்ப்புகள் மிகக்குறைவு. அதே போல, பெண்களுக்கு இவை, 20 வயதிலிருந்து 45 வயது வரை அதிகமாக உண்டாகும். ஓமோன்களான ஈஸ்ட் ரோஜனும், புரோஜ்ட்ரானும் கருப்பைக்கட் டிகளின் வளர்ச்சியைத் தூண்டி விடக்கூடியன.

கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பைக்கட்டிகள் வளர வாய்ப்பு உண்டு. ஏனென்றால், அந்த நேரத்தில்தான் இந்த இரண்டு ஓமோன்களும் அதிகளவில் சுரக்கும். நீங்கள் தெந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், ஒரு பெண் எப்போது மெனோபாஸைத் தாண்டுகிறாளோ, அப்போது ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதால் இந்த கட்டிகளும் சுருங்கி விடும்.

கர்ப்பப்பை கட்டிகளில் வித்தியாசமான வகைகள் இருக்கிறதா?

கர்ப்பப்பைக் கட்டிகள் அது உருவாகியிருக்கும் இடத்தைப் பொருத்தும், கர்ப்பப்பையின் சுவரில் அது இருக்கும் நிலையைப் பொறுத்தும் வித்தியாசப்படும். கர்ப்பப்பை தசைகளின் டிசுவில் உருவானால் அவை கர்ப்பப்பையின் சுவல் எழும்பும். ஒருவேளை கருப்பை சுவரின் மேல் இருந்தால், அது சப்செரோசல் பைப்ரோய்ட் என்று அழைக்கப்படும். இந்த வகை பைப்ரோய்ட்கள் கர்ப்பப்பையின் வெளிப்பக்கமாக வளரும். சில நேரங்களில் இந்த சப்செரோசல் பைப்ரோய்ட், மெல்லிய தண்டுடன் உருவாகி கர்ப்பப்பை சுவரில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும். இது பெடன் குலேட்டட் பைப்ரோய்ட் என்று அழைக்கப்படும். இன்ட்ராரல் பைப்ரோய்ட் கர்ப்பப்பை சுவருக்குள் உருவாகி, வெளிப்புறமாக வளரலாம். அல்லது கர்ப்பப்பையின் உள்பக்கம் நோக்கி வளரும்.

எப்போதாவது சில பைப்ரோய்ட்கள் கர்ப்பப்பையின் உட்பகுதியில் வளரும். இது சப்மியூகோசல் பைப்ரோய்ட்கள் எனப்படும்.
இந்த பைப்ரோய்ட்கள் மெல்லிய தண்டுடன், கர்ப்பப்பை வாய்க்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கலாம். இது பைப்ரோய்ட் பாலிப் என்றழைக்கப்படும். சப்மியூகோசல் பைப் ரோய்ட் கர்ப்பப்பையின் உள்வ சவ்வில் ஏற் பட்டால் அதிகமான அல்லது ஒழுங்கில்லாத ரத்தப்போக்கு ஏற்படலாம்.

கர்ப்பப்பை கட்டிகளை எப்படிக் கண்டறிவது?

கருப்பைக் கட்டிகள், பொதுவாக பிரசவகால பசோதனையின்போதுதான் கண்டறியப் படும். அதிகளவான பெண்கள், முதன் முதலாக தங்களுக்கு கட்டிகள் இருப்பதை வழக்கமான பசோதனையின் போதுதான் தெந்து கொள்கிறார்கள். சாதாரண நிலையைவிட கர்ப்பப்பை பெரிதாக இருக்கும்.
உங்கள் மகப்பேற்று மருத்துவர், உங்கள் கர்ப்பப்பையின் அளவு மூன்று மாதம் கருத்தரித்தது போலவோ அல்லது தேங்காய் அளவில் இருக்கிறது என்றோ சொல்லலாம்.

கருப்பையின் அளவு எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்வதற் காகத்தான் இப்படி உதாரணமாக சொல்வார்களே தவிர, பயறுத்துவதற்காக அல்ல உங்கள் மகப்பேறு மருத்துவர் அல்ராசவுண்ட் பரிசோதனை செய்யச் சொல்வார். இதனால் கட்டிகளின் அளவு, எண்ணிக்கை, அது இருக்கு மிடம் போன்றவைகளைத் தெந்து கொள்ளலாம். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில் இவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும் என்றாலும், சில நேரங்களில் கட்டிகளின் சரியான இருப்பிடத்தைக் கண்டறிய கஷ்டமாகி விடுவதும் உண்டு! உண்மை என்னவென்றால் கட்டிகள் இருப்பதைக் கண்டறிய சி.டி. ஸ்கேனும், எம்.ஆர்.ஐ.
ஸ்கேனும் தேவையில்லை.



Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல