ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

கேன்சருடன் ஒரு யுத்தம்

யாரிவள்?
வலைக்குப் புதியவள்
வலைப் பதிவர்க்கும் புதியவள்
கேட்டவர்க் கெல்லாம்
இல்லையென்னாது
வகை வகையாய் உதவியவள்
யாருக்கும் பாரமாய் இல்லாது
மாலையிட்ட கணவருக்கும்
மகிழ்ந்து பெற்ற மகவுகளுக்கும்
சுமைதாங்கியாய் இருந்தவள்
அவர்களின் கனவுகளை நனவாக்கத்
தன் கனவுகளைத் தொலைத்தவள்
அல்லும் பகலும் அயராது உழைத்தவள்
அவர்கள் சாய்ந்துகொள்ளத்
தோள் கொடுத்தவள்
இவளின் தன்னலங் கருதா
உழைப்பையும் உறுதியும் கண்டு
ஊழே பொறாமை கொண்டது
இவளின் தவத்திற்கு
ஊறு விளைவிக்க
உறுதி பூண்டது.
உற்றம் மயங்க
சுற்றம் கலங்கப்
பெற்றுவரும் பெயர் திரியப்
புற்றுநோய்க்கு ஆளாக்கிப்
பெருமிதம் கொண்டது.
அடுக்குமா இவ்வூழின்
அவலச் செயலுக்கு?
சான்றோரே சான்றோரே
தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்றீரே என்றீரே
தீதென்ன செய்தேன்
தீங்கென்ன விளைவித்தேன்
ஏன் உற்றது இப் புற்று?
என்றிவளின் வினாவிற்கோ
பதிலில்லை பதிலில்லை.
அடுத்துச் சிந்திப்பதற்கு
அட்டியென்ன?சிந்தித்தாள்
விதியே,விதியே நின்னை
நிந்திப் பயனில்லை
சந்திப்பேனுன்னை
ஆகா!விந்தையிவள் முயற்சியென நீ
நொந்துபோகும் அளவிற்குப்
பெறுவேன் மருந்தை
சீரகப் பெற்றவள் உற்ற
மார்பகப் புற்றைக்
கதிரியக்கம் கொண்டே
இற்றுவிழ வைப்பேன்
எனத் தன்னிலை மீண்டாள்
மீண்டும் உறுதி பூண்டாள்.
மருத்துவம் துணை கொண்டு
மனத்துவம் கருத்திற் கொண்டு
பணத்துவம் பலம் கொண்டு
சென்றாள்
சிகிச்சை பெறுகிறாள்.
விதி வெல்வாள்.


அனுராதா


(பி.கு:இக்கவிதையை எழுதிய திருமதி.அனுராதா தற்போது உயிருடன் இல்லை. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ந்திகதி புற்றுநோயால் மரணமானார். அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.)
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல