ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

தயிரை ஒதுக்காதீர்கள்

தயிரை கோடைகாலம், குளிர்காலம் என பேதம் பார்க்காமல் அனைத்து காலங்களிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் பல்வேறு நோய்களை குணமாக்கும் அதிசயம் ஒளிந்துள்ளது.
தயிரில் அதிக அளவு ஊட்டச்சத்து, புரதம், கல்சியம், "ரைபோஃபுளோவின்' மினரல் உள்ளிட்டவை நிறைந்துள்ளது.

தயிர் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்ட புரதத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. பால் ஒரு மணி நேரத்தில் 32 சதவிகிதம் மட்டுமே ஜீரணமாகும்.ஆனால் தயிர் ஒரு மணி நேரத்தில் 91சதவிகிதம் ஜீரணமாகும்.

தயிரில் நிறைந்துள்ள நன்மை செய்யும் பாக்டீயாக்களால் உடலின் ஜீரணத்தன்மையும் அதிகக்கும்.

உடலில் விட்டமின் "பி' உறிஞ்சுவதற்குகிரகிப்பதற்கு தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் ஊக்குவிக்கும்.

இதில் உள்ள லேக்டிக் அசிட் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த மிகவும் உகந்தது.

குடலில் உற்பத்தியாகும் நன்மை விளைவிக்கும் "பெப்சின் ரெனின்' உற்பத்தியை அதிகக்கும்.

தலையில் தயிர் கொண்டு மசாஜ் செய்வதன் லம் பொடுகுத் தொல்லை நீங்குவதுடன் தூக்கம் நன்கு வரும்.

மஞ்சள் காமாலையின் போது, உடலில் அமோனியா அதிக அளவில் உற்பத்தியாகும்.
இதை தயிரில் உள்ள லேக்டிக் ஆசிட் குறைக்கும்.

சர்க்கரை, இரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை உள்ளவர்கள் கொழுப்புச் சத்து உள்ள பாலில் தயாக்கப்பட்ட தயிரை தவிர்ப்பது நல்லது. இவர்கள் கொழுப்புச் சத்து இல்லாத பாலில் தயாக்கப்பட்ட தயிரையோ அல்லது மோரையோ எடுத்துக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு தயில் சர்க்கரை அல்லது தேன் கலந்து லஸி போன்று கொடுத்து வந்தால் உடல் எடை அதிகக்கும்.

.......................
ஒரு ஸ்பூன் தேன், மசித்த பப்பாளி இவற்றுடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெறும்.

தயிருடன், ஓரன்ஞ் அல்லது எலுமிச்சை சாறு கலந்தும் முகத்தில் தடவி வரலாம்.

நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தயிர் அதிக நன்மை பயக்கக் கூடியது.

தூக்கமின்மை உள்ளோர்கள் தயிரை உணவில் சேர்த்துக் கொண்டால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.

முழுமையாக உறையாத தயிர் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல