வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

பருப்புத் துவையல்

முதல் வகை:

தேவையானவை:

துவரம்பருப்பு 1 கப்
மிளகு 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
எண்ணைய் 1 டீஸ்பூன்

செய்முறை:

துவரம்பருப்பையும் மிளகையும் வாசனை வரும்வரைஎண்ணையில் வறுத்து உப்பு வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து நன்கு அரைக்கவேண்டும்.
நன்றாக பருப்பு மசிந்து மையாக ஆகும்வரை அரைக்கவேண்டும்.

இரண்டாம் வகை:

தேவையானவை:


துவரம்பருப்பு கால் கப்
கடலைபருப்பு கால் கப்
தேங்காய்த்துருவல் 2 tblsp
வற்றல் மிளகாய் 6
உப்பு தேவையானது

செய்முறை:

துவரம்பருப்பு,கடலைப்பருப்பு,மிளகாய்வற்றல் மூன்றையும் கொஞ்சம் எண்ணையில்
வறுத்துக்கொண்டு உப்பு தேங்காய் துருவல் வைத்து
அரைக்கவேண்டும்.

சனிக்கிழமை..சீரகம்-மிளகு ரசமும்..பருப்புத்துவையலையும் சாப்பிட்டால்..ஞாயிறு அன்று ஸ்பெஷல் சாப்பாட்டிற்கு
வயிறு தயாராகிவிடும்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல