திங்கள், 26 ஏப்ரல், 2010

3 வருடங்களை தொடர்ச்சியாக கடலில் கழித்து அமெரிக்கர் உலக சாதனை

3 வருடங்கள் தொடர்ச்சியாக கடலில் பயணித்து அமெரிக்காவைச் சேர்ந்த ரெய்ட் ஸ்டோவ் (Reid Stowe 58 வயது) உலக சாதனை படைத்துள்ளார்.

அவர் 1,096 நாட்களை கடலில் செலவிட்டு, ஏற்கனவே அவுஸ்திரேலியரான ஜோன் சான்டர்ஸால் கடலில் 658 நாட்களை கழித்து நிறைவேற்றப்பட்ட உலக சாதனையை முறியடித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு அமெரிக்க நியூஜெர்ஸியிலிருந்து தனது காதலியான சோனியா அஹ்மட்டுடன் (Soanya Ahmad 23 வயது) இணைந்து ரெய்ட் மேற்படி சாதனை முயற்சியை ஆரம்பித்திருந்தார். இதன் போது கர்ப்பமடைந்திருந்த சோனியாவின் உடல் நலம் மோசமடைந்ததால், அவர் இடைநடுவில் பயணத்தை கைவிட நேர்ந்தது. தொடர்ந்து அவர் 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆண் குழந்தை யொன்றை பெற்றெடுத்தார்.

மூன்று வருடங்களை கடலில் கழித்த ரெய்ட், தனது 21 மாத வயதான மகனின் முகத்தை இதுவரை ஒருபோதும் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல