திங்கள், 26 ஏப்ரல், 2010

விமான பணிப்பெண்களிடம் பாலியல் சேஷ்டை புரிந்த இலங்கையருக்கு சிறை

சிங்கப்பூரிலிருந்து ஹொங்கொங்கிற்கு பறந்த விமானத்தில் கடமையிலிருந்த பணிப்பெண்களிடம் பாலியல் சேஷ்டை புரிந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு 14 நாள் சிறைத்தண்டனையும் 15,000 ஹொங்கொங் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பணிப்பெண்ணுடன் பாலியல் சேஷ்டை புரிந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 47 வயதான Halpita Acharige Wijith Thalis என்ற நபருக்கே சிங்கப்பூர் நீதிவான் ஏர் னெஸ்ட் லின் காம் (Ernest Lin Kam- hung) மேற்படி தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தார் என்று சிங்கப்பூர் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவம் நடந்தபோது குறித்த நபர் அவரது உதவியாளர்களுடன் கதே பசுபிக் விமானத்தில் சிங்கப்பூரிலிருந்து ஹொங்கொங் ஊடாக ஜப்பானுக்கு வர்த்தக ரீதியிலான பிரயாணத்தை மேற்கொண்டிருந்தார்.

சிங்கப்பூர் சுவென் வேன் நீதிமன்றத்தில் விமான போக்குவரத்து பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அநாககமாக நடந்து கொண்டார் என்று தம்மீது சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுக்களையும் அவர் ஒப்புக் கொண்டார்.

குறிப்பிட்ட இலங்கையை சேர்ந்தவர் அமர்ந்திருந்த ஆசனத்திற்கு முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த பிரயாணிக்கு பணிப் பெண் சிற்றுண்டிகளை பரிமாறுகையில் அவர் பணிப்பெண்ணின் பின் பகுதியை தொட்டு அங்கசேஷ்டை புரிந்துள்ளார். இதனை பணிப் பெண் கண்டுக்கொண்டதுடன் தேவையானதை வாயினால் கேட்டு வாங்கிக் கொள்ளுமாறும். கைகளால் தொடவேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.

இதனையடுத்து அவர் பணிப்பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாக குறித்த நபர் மற்றுமொரு பணிப்பெண்ணுடனும் இதே மாதிரி நடந்துள்ளார். பின்னர் விமானத்திலிருந்து இறங்கும் போது மூன்றாவது பணிப் பெண்ணின் மார்பகத்தை தனது வலதுகை முழங்கையால் இடித்துள்ளார்.

விமானம் தரையிறங்கியதும் மூன்று பணிப் பெண்களும் சம்பவம் பற்றி அவர்களது முகாமையாளரிடம் புகார் செய்யவே முகாமையாளர் விமானநிலைய பொலிஸாரிடம் அவரை ஒப்படைத்தார். இதனையடுத்தே அவர் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார் என்றும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல