“இங்குள்ள சமுதாயத்தினர் ஏற்றுக்கொள்ளும் வகையில் சேலை அணிந்தே வைபவங்களுக்குச் செல்ல வேண்டும்'' என்று மனித உரிமைகள் இல்லத்தின் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி சேவியர் கூறுகிறார். ஆனால், மேற்கு நாட்டு கலாசாரத்தில் கல்வி பயின்ற சேவியர் அவரது அலுவலகத்தினுள் பணியாற்றும் போது ட்ரவுஸர் அணிந்து கொண்டு பணியாற்றுவது தமக்கு சௌக ரியமாக இருக்கிறது என்று உணர்கிறார்.
இவ்வாறு சேவியர் அலுவலகத்திலேனும் ட்ரவுஸர் அணிவதால் பழைமையான பழக்க வழக்கங்களில் ஊறிப் போன யாழ்ப்பாண பெண்களுக்கு இது ஒரு படி முன்னேற்றத்திற்கான பாதையாக கணிக்கப்படுகிறது.
ன்று தசாப்த கால ஆயுதப் போராட் டத்தின் பின்னர் கடந்த வருடம் அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் யற்சிகள் காரணமாக அப் பிரதேச பெண்கள் பாரம் பய விதிறைகளில் கடும் சட்டங்கள், பழக்கவழக்கங்களிலிருந்து மெதுவாக விடு பட்டுக் கொண்டு வந்தமை குறிப்பிடத் தக்கது.
சிறுபான்மை தமிழ் மக்களுக்கென தனிநாடு ஒன்றை அமைப்பதற்காக விடுதலைப் புலிகள் நடத்திய ஆயுதப் போராட்டத்தில் அவர்கள் தோல்வியடைந்த போதிலும் பெண்கள் அவர்களைப் பற்றிய நிலைமை குறித்து கவனம் செலுத்தி சமுதாயத்தின் வற்புறுத்தல்களுக்கு அடிபணியாது நடந்து கொள்ள உதவியுள்ளார்கள்.
உண்மையில் பல பெண்கள் தனிப்பட்ட அவலங்கள் காரணமாக முன்னேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. யுத்தத்தினால் விதவைகளான பல்லாயிரக் கணக்கான பெண்களும் இவர்களில் அடங்குவர்.
யுத்தத்தில் உயிர் பிழைத்த கணவன்மார் உள்ள குடும்பங்களும் உண்டு. ஆனால், இக் குடும்பங்களிலும் மனைவியரே குடும்ப தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். விடுதலைப் புலிகள் எழுச்சி பெற்ற உச்சக் கட்டத்தின் போது தலைமை பங்களிப்பை பெண்கள் பொறுப்பேற்க வேண்டி இருந்தது என்று சேவியர் தெவித்தார். கணவன்மார் உயிருடனிருந்த பெண்கள்கூட விரிவடைந்த பங்கினை ஆற்றினர். வீட்டில் ஆண்கள் இருக்கிறார்களா என்று எவராவது தேடி வந்தால் அல்லது வீட்டுக்கு வெளியே கலவரம் ஏற்பட்டால் ஆண்கள் வெளியே வராமல் வீட்டுக்கு உள்ளேயே இருந்து விடுவார்கள்.
பெண்களே வெளியே வந்து நிலைமையை சமாளிப்பார்கள்.
அவ்வேளையில் பல இளைஞர்கள் வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு புலிகள் இயக்கத்தில் பலவந்தமாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அல்லது இராணுவம் வீடுகளுக்குச் சென்று ஆண்கள் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் அல்லது அவர்களது இயக்கத்தில் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் அவர்களை கைது செய்து விடுவார்கள்.
ஒரு யாழ்ப்பாண குடும்பஸ்தர் எவ்வாறு பெண்கள் சமாளித்தார்கள் என்று விபரிக்கையில், அப்பிரதேச முதியவர்களை பிரதிபலித்தார். பெண்கள் குடும்பத்தை நிருவகிப்பதுடன் தீர்மானங் களையும் எடுக்கின்றனர். முதலாவது பாரம்பயப் பணியுடன் மட்டும் அவர்கள் திருப்தியடைகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
ஆனால், இறுதியில் மீதமுள்ள சதாயத்தினரும் பெண்களுக்கு கூடுதல் இடம் கொடுக்கின்றனர். ஆண்களின் பொறுப்பாக இருந்த குடும்ப உறுப்பினர்களின் சுகாதாரம், கல்வி ஆகியவை சம்பந்தமாக தீர்மானம் எடுக்கும் பொறுப்பை இந் நாட்களில் பல குடும்பங்களில் பெண்களே ஏற்றுக் கொள்கிறார்கள். இளைஞர்கள் இயக்கத்தில் இணைந்து கொள்வதால் சகப் பொறுப்புகளிலிருந்தும் பெற்றாரின் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபட்டு சுதந்திரம் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்ற மனப் பான்மையை விடுதலைப் புலிகள் ஏற்படுத்தினார்கள். இளம் பெண்கள்கூட விடுதலைப்புலி இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். கூச்ச மனப்பான்மை கொண்டிருந்த இளம் கிராமியப் பெண்கள் ட்ரவுஸர்களும் சேர்ட்டும் அணிந்து விறுவிறுப்பானவர்களாக மாறி அதிகாரத்துடன் கையில் துப்பாக்கி ஏந்தினார்கள்.
இந்த சுதந்திரம் நிம்மதியான விடுதலையும் சமத்துவம் என்ற ஒரு மாயையும் இளம் பெண்களுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைத்தது என்று சேவியர் தெவித்தார்.
ஒரு காலத்தில் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவியான அடேல் பாலசிங்கம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த போது அவரது கணவர் அன்ரனுடன் சரிசமமாக அமர்ந்து பேசுவதைப் பார்த்த இளைஞர், யுவதிகள் ஆச்சயமடைந்தார்கள். யாழ்ப்பாண சதாயத்தில் இது புதுமையானதாகும்.
பாலசிங்கம் விடுதலைப் புலிகளின் மந்திராலோசகராகவும் அவரது மனைவி அவுஸ்திரேலியப் பெண்ணான அடேல் புலிகளின் மகளிர் பிரிவுத் தலைவியாகவும் பணியாற்றினார்கள். சில காலத்தின் பின்னர் சுகவீனம் காரணமாக அன்ரன் மரணமடைந்த பின்னர் தாதித் தொழில் கற்றி ருந்தவரான அடேல் பிரிட்டனில் குடியேறி விட்டார்.
சேவியர் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு இரண்டு வருடங்கள் முன்னதாக 2007ஆம் ஆண்டில் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பி அவரது தந்தையைப் போன்று சிவில் உரிமைகள் வழக்கறிஞராக பணியாற்றினார். தற்போது அவர் பணியாற்றும் நிறுவனம் தமிழ் மக்களின் உரிமைக்காக பாடுபடுவதுடன் அவர்களுக்கு இலவச சட்ட உதவியையும் வழங்கி வருகிறது.
இந்நாட்டுப் பெண்கள் படிப்படியாக தங்களுக்கென ஓர் இடத்தை பிடித்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள் என்று சேவியர் தெவித்தார். எனினும், இலங்கையில் ஏனையோரைப் போன்று பெண்களும் சுதந்திரமடைய நீண்ட காலம் எடுக்கலாம் என்று அவர் கூறினார்.
இன்னமும் அநேகமான யாழ்ப்பாணப் பெண்கள் ஜீன்ஸ் அல்லது ட்ரவுஸர் அணிவதில்லை. யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் மேற்குலக கல்வி கற்ற பெண்களும் வெளிநாடுகளிலிருந்து விட்டு யாழ்ப்பாணம் வருவோரும் யுத்தம் முடிவடைந்ததும் பெருமளவில் யாழ்ப்பாணத்திற்கு வரும் தமிழர்கள் அல்லாத பலரும் அரச பதவிகளை வகிக்காத ஊழியர்களும் பெருமளவில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்கள மக்களும் அநேகமாக ட்ரவுஸர் அணிந்து வருகிறார்கள்.
ஆனால், இதேவேளை சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட பெண்கள் ஸ்கூட்டர் ஓட்டும் காட்சியை தற்போது மீண்டும் காணக்கூடியதாக உள்ளது.
யாழ்ப்பாண நகரிலுள்ள மகளிர் பாடசாலை விடுதி ஒன்றில் இளம் பெண்கள் கட்டை கால்சட்டை அணிகிறார்கள்.அதுவும் பாடசாலை வளாகத்திற்குள் மட்டுமே என்று தமது பெயரை வெளியிட விரும்பாத ஆசிரியை ஒருவர் கூறுகிறார்.
சில காலத்திற்கு முன்னர் சேலை வாங்க வசதியற்ற பெண்கள் பாவாடை அணிந்தார்கள். அதுவும் முதியோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பெண் விடுதலை ஓரளவு ஏற்பட்டு வருகின்ற போதிலும் இன்னமும் யாழ்ப்பாண சமுதாயம் ஆண் ஆதிக்கத்திலேயே இருந்து வருகிறது.
ஐ.பி.எஸ்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக