திங்கள், 5 ஏப்ரல், 2010

செக்ஸ் தொல்லைக்கு பயந்து 6 ஆயிரம் மரங்கள் வெட்டி சாய்ப்பு

அடர்ந்த காட்டு பகுதியில் இளம் ஜோடியினர் செக்ஸ் வைத்து கொள்வதை தடுக்க, பிரிட்டன் நாட்டு வனத்துறையினர் ஆறாயிரம் மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். பிரிட்டனில் லங்காஷயர் மற்றும் டார்வென் பகுதிகளையொட்டிய காட்டு பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன. சுற்றுலாவுக்காக வரும் இளம் ஜோடிகள் இந்த காட்டு வழிபாதையில் மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒதுங்கி தங்கள் சல்லாபங்களை அரங்கேற்றி வந்தனர்.

இதனால், குழந்தைகளை அழைத்து வரும் மற்ற சுற்றுலாப் பயணிகள் சங்கடத்துக்கு உள்ளாயினர்.’மற்றவர்களை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் உங்கள் அந்தரங்க நடவடிக்கை அமையக்கூடாது’ என்ற வகையில், இந்த பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைக்கப் பட்டிருந்தன.இருப்பினும், இளம் ஜோடிகள் எதை பற்றியும் கவலைப்படாமல் மரத்தின் பின்புறத்தில் படுத்து கொண்டு சில்மிஷங்களை செய்து வந்தனர்.

சல்லாபகாரர்களுக்கு வழி வகுக்கும் இந்த மரங்களை போலீசார் உதவியுடன் இப்பகுதி நிர்வாகம் வெட்டி தள்ளியது. ஆறாயிரம் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு அந்த பகுதி வெட்டவெளியாகி விட்டது.

இதனால், உள்ளூர் நிர்வாகம் திருப்திப் பட்டாலும், பசுமை ஆர்வலர்களுக்கு வருத்தம் தான்.’நூற்றாண்டு பழமைமிக்க மரங்களை, ஒரே நாளில் எப்படி வெட்டி சாய்க்கலாம்? இதுகுறித்து, முன்னறிவிப்பு வெளியிட் டிருக்க வேண்டும்’ என பசுமை ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.’இந்த பசுமையான பகுதி சிவப்பு விளக்கு பகுதியாக மாறிவிடக்கூடாது, என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் மரங்களை வெட்டுவதற்கு ஒப்பு கொண்டோம்’ என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல