திங்கள், 19 ஏப்ரல், 2010

நித்யானந்தாவுக்கு அரஸ்ட் வாரண்ட்

நித்யானந்தாவுக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
நடிகையுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் காட்சிகள் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளியானது. சாமியார் என்ற போர்வையில் நல்லொழுக்கம், நீதி போதனை செய்துவிட்டு, இதுபோன்ற ஆபாச செயல்களில் ஈடுபடுவது இந்து மத உணர்வாளர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது.

எனவே அவர் மீது 295ஏ பிரிவின் கீழ் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி வக்கீல் கே.செல்வமணி என்பவர் ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி குணசேகர், ஏப்ரல் 2ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆஜராக பெங்களூரில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். ஆனால் நேற்று வரை அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து வக்கீல் கே.செல்வமணி, நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘நித்யானந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நித்யானந்தாவை மே 20ம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட காவல் துறைக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல