திங்கள், 19 ஏப்ரல், 2010

திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன


திருமணத்துக்கு அப்பாலான பாலியல் தொடர்புகளைத் தூண்டும் வகையில் கவர்ச்சிகரமாக ஆடை அணியும் பெண்கள் காரணமாகவே பூமியதிர்ச்சிச்சம்ப வங்கள் அதிகரித்துள்ளதாக ஈரானிய சிரேஷ்ட மதத் தலைவர் ஒருவர் உரிமை கோயுள்ளார்.

ஈரானிய தலைநகர் தெஹ்ரானிலுள்ள பள்ளிவாசலொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஆயதுல்லா காஸெம் ஸெடிகி என்ற மேற்படி மத குரு ஆற்றிய உரை, சனிக்கிழமை அந்நாட்டு பத்திரிகைகள் பலவற்றில் பிரசுரமாகியுள்ளது.

““முறையற்ற விதத்தில் ஆடை அணியும் பல பெண்கள், இளைஞர்களை வழிதவறச் செய்து அவர்கள் ஒழுக்கங் கெடவும், சமூகத்தில் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் தொடர்புகள் ஊக்குவிக்கப்படவும் காரணகர்த்தாக்களாகின்றனர்'' என அந்த மதகுரு தெரிவித் துள்ளார்.

ஈரானில் கடந்த 3 தசாப்த காலத்துக்கு மேலாக மதத் தலைவர்களின் ஆணைக்கு அமைவான ஆடைகளே நடைமுறையில் அணியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தலையையும் உடலையும் வெளிப்படுத்தும் வகையில் பெண்கள் ஆடை அணிவது ஈரானில் தண்டனைக்கும் தண்டப்பண விதிப்புக்கும் உள்ளாக்கக் கூடிய குற்றமாகும்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல